20 Aug 2019

சீயோன் தேவாலயத்தில் பாதிக்கப்பட்ட பெற்றோர்களை இழந்த 13 சிறார்களுக்கு 20 இலட்சம் ரூபாய் உதவித்தொகை பகிர்ந்தளிப்பு.

SHARE
சீயோன் தேவாலயத்தில் பாதிக்கப்பட்ட பெற்றோர்களை இழந்த 13 சிறார்களுக்கு 20 இலட்சம் ரூபாய் உதவித்தொகை பகிர்ந்தளிப்பு.
ஏப்ரில் 21ம் திகதி குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட நிலையில் பெற்றோர்களை இழந்த சிறார்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பில் செவ்வாய்க்கிழமை 20.08.2019 இடம்பெற்றது.
கிழக்கு மாகாண ஊழியர்களின் நலன் புரிச் சங்கத்தின் (வெஸ்லோ) ஊடாக இரண்டு மில்லியன் ரூபா சேகரிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட 13 சிறார்களுக்கு உதவு ஊக்கத் தொகை பகிரந்தளிக்கப்பட்டதாக கிழக்கு மாகாண ஊழியர்கள் நலன்புரிச் சங்கத்தின் தலைவி கே. கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள கேட்போர் கூடத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதிப்பிரதம செயலாளர் சரத் அபேகுணவர்தன, மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசெப் பொன்னையா, கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்டோரும் பயனாளிகளான பாதிக்கப்பட்ட சிறார்களும் அவர்களது உறவினர்களும் சமயப் பெரியார்களும் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண ஊழியர்கள் நலன்புரி சங்கத்தின் (வெஸ்லோ) சமூக நலன்புரி வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வுதவி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.







SHARE

Author: verified_user

0 Comments: