3 Jul 2019

வீதி விபத்தில் சிக்கியவர் மரணம்.

SHARE
வீதி விபத்தில் சிக்கியவர் மரணம்.
மட்டக்களப்பு திருகோணமலை வீதி கதிரவெளியில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கிய குடும்பஸ்தரான ஆணொருவர் மரணித்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் வாகரை, நாகபுரம் பால்சேனையைச் சேர்ந்த வீரசிங்கம் சுதர்ஷ‪ன் (வயது 30) என்ற ஒரு குழந்தையின் தந்தையே மரணித்தவராகும்.‬

இவர் தனது குழந்தைக்கான பால் மா முத்திரையைப் பெறுவதற்காகச் சென்று கதிரவெளி பிரதான வீதியால் சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது திருகோணமலையிலிருந்து வந்த கார் ஒன்று மோதியதில் விபத்துச் சம்பவித்துள்ளது.

படுகாயடைந்தவர் உடனடியாக வாகரை மாவட்ட வைத்தியசாலயில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டபோதும்வரும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக காரைச் செலுத்தி வந்த அதன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலம் உடற் கூறாய்வுப் பரிசோதனைகள் முடிந்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி வடிவேல் ரமேஸ் ஆனந்தன் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: