பெரியநீலாவணையில் கோழிகளை ஏற்றி வந்த லொறி விபத்து.
பெரியநீலாவணை பிரதான வீதியில் அதிக நிறையுடன் இறைச்சிக்காக கோழிகளை ஏற்றிவந்த லொறி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகிலிருந்த வடிகாலுக்குள் பாய்ந்துள்ளது விபத்துக்குள்ளாகியுள்ளது. ஏறாவூர் பகுதியிலிருந்து இறைச்சிக்காக கோழிகளை ஏற்றிக்கொண்டு கல்முனைப் பகுதிக்கு சென்றுகொருந்தவேளை பெரியநீலாவனையில் வைத்து இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் திங்கட்கிழமை(29) காலை 6.15 மணியளவில் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இடம்பெற்றுள்ளது.
இதனால் வீதியருகில் நின்றுகொண்டிருந்த மீன் வியாபாரி ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
வாகனத்தைச் செலுத்திவந்த சாரதி மற்றும் உதவியாளர் தெய்வாதீனமாக எதுவித காயங்கள் இல்லாமல் மீட்கப்பட்டுள்ளார்கள். இதனால் வடிகான், குறித்த லொறி, வீதியருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார்சைக்கிள் ஒன்றிற்கும் சேதமடைந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக கல்முனை போக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்
0 Comments:
Post a Comment