29 Jul 2019

பேரினவாதக் கட்சிகள் தமிழ் மக்களுக்குரிய அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் அக்கறையில்லாமல் செயற்படுகின்றன – எம்.பி. சிறிநேசன்.

SHARE
பேரினவாதக் கட்சிகள் தமிழ் மக்களுக்குரிய அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் அக்கறையில்லாமல் செயற்படுகின்றன – எம்.பி. சிறிநேசன்.
பேரினவாதக் கட்சிகள் தமிழ் மக்களுக்குரிய அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் அக்கறையில்லாமல் செயற்படுகின்றன. என தமிழ் தேசிக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி வட்டார பிரதேச சபை உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜின் வேண்டுகோளிற்கிணங்க கம்பெரலிய திட்டத்தின்கீழ் களுவாஞ்சிகுடி சக்தி இல்ல வீதிக்கு கொங்கீட்டு புணரமைப்பு வேலைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு சனிக்கிழமை (27) இடம்பெற்றது.  இதன்போது கலந்து கொண்டு வீதி புணரமைப்பு வேலைகளை ஆரம்பித்து வைத்துவிட்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…. 

அண்மையில் அரசியல் யாப்பு தொடர்பில் எமது தலைவர் சம்பந்தன் ஐயா மூலம் நாடாளுமன்றத்திலே ஒத்திவைப்பு பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டது. அரசியல் அமைப்பு விடையத்தில் நாடாளுமன்றத்திலே அங்கம் வகிக்கின்ற கட்சிகள் என்ன போக்கைக் கொண்டிருக்கின்றார்கள் என்ற மதிப்பீட்டைப் பெறுவதற்காகத்தான் அந்த ஒத்திவைப்பு பிரேரணை கொண்டுவரப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, மற்றும் பொதுஜனபெரமுன கட்சியாக ஆகிய பிரதான கட்சிகள் இவ்விடையத்தில் தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் எவ்வாறான மனப்பாங்கைக் கொண்டிருக்கின்றார்கள், என்பதை வெளிப்படையாக அறிந்து கொள்வதற்காக இந்த பிரேரணை கொண்டுவரப்பட்டது. 

கடந்த காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பத்கு கள்ளம் கபடமில்லாமல் செயற்பட்டிருந்தது. அதற்காக 1949 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு தொடக்கம், அகிம்சை ரீதியில் அர்த்தபுஸ்ட்டியுள்ள போச்சுவார்த்தை நடாத்தி புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் கண்டிருக்கின்றது. எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க தனிச்சிங்களச் சட்டத்தைக் கொண்டுவந்து இந்த நாட்டை இரண்டாக பிளப்பதற்கு முதலாவது அத்திவாரமிட்டவராவார். அந்தநேரத்தில் கொல்வின் ஆர்.டி.சில்வா ஒரு மொழி என்றால் இரு நாடு, இரு மொழி என்றால் ஒரு நாடு. எனற கருத்தை தெரிவித்திருந்தர். அவர் தெரிவித்திருந்த கருத்திற்கிணங்க இந்த நாடு இரண்டாக உடைவதற்கு ஆயுதப்போராட்டம் ஒன்று நடைபெற்றிருந்தது. எனவே அந்த ஆயுதப்போராட்டத்தை உருவாவதற்கு முக்கிய மூலகர்த்தாவாக விளங்கியவர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க அவர்கள்தான். 1972 ஆண்டு சிறிமாவோ பண்டார நாயக்க பௌத்த மதத்ததையும், சிங்கள மொழியையும் முன்னிறுத்தி தமிழ் தேசியத்தை மறுத்து அரசியல் யாப்பை கொண்டுவந்தார். அது ஒருதலைப்பட்சமான யாப்பாக இருந்தது. அப்போதே அவர்கள் தமிழ் மக்களின் உணர்வுகளையும், உரிமைகளையும், மத்திக்கவில்லை. 

ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம், 1983 ஐக்கிய தேசியக் கட்சியின் காலத்தில் ஏற்பட்ட கறுப்பு யூலை போன்ற அம்சங்கள்தான் தமிழ் இளைஞர்களை வெறுப்பேற்றியதுடன், விடுதலையின் பக்கம் தள்ளிவிட்டது எனலாம். எனவே சிங்கள பௌத்த தலைவர்கள் தமிழ் மக்களின் நேசக்கரங்களைப் பற்றிக் கொள்கின்றார்களில்லை, இவ்வறான பாரபட்சமான சம்பவங்கள்தான் இனவாதம், மதவாதம், அடிப்படைவாதம், பிற்போக்குவாதம் போன்றன, முளைப்பதற்கும், தளைப்பதற்கும், இந்த நாடு ஒருதலைப்பட்டசமான சமூகத்தினருக்கு மாத்திரம் சொந்தமானது என்று சொல்வதற்கும், அவர்களுடைய பக்கச்சார்பான கருத்துக்களதான் காணரமாக அமைந்துள்ளன.

எனவே கடந்த காலத்தில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்புபு தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பத்கு கள்ளம் கபடமில்லாமல் விட்டுக்கொடுப்புடன், ஒளிவு மறைவின்றி, வழிநடாத்தல் குழுவை உருவாக்கிய,  6 உபகுழுக்களையும் உருவாக்கி ஜனநாயக அடிப்படையில் ஒரு அரசியல் தீர்வைக் காண்பதற்கு செயற்பட்டு வருகின்றது. இந்த எமது முயற்சியை தேசிய அரசாங்கம் என்ற ரீதியில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீ லங்கா சுதந்தந்திரக் கட்சியும், செய்யவேண்டும் என எதிர்பார்க்கின்றோம். ஆனால் சுயநல கட்சி இலாபத்தில் செயற்படுகின்ற சிங்கள அரசியல் கட்சிகள் இந்த அருமையான சந்தர்ப்பத்தை தவறவிட்டுள்ளார்கள். இச்சந்தர்ப்பமானது சிங்கள தலைமைகள் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைக்க முடியாது என்பதைக் காட்டிநிற்கின்றது. 

உள்நாட்டு ரீதியாக இலங்கையின் இனப் பிரச்சனையைத்த் தீர்த்து வைக்கக் கூடிய சக்தி, தலைமைத்துவம், ஆளுமை போன்றன சிங்களத் தலைவர்களிடத்தில் இல்லை என்பதை தமிழ் மக்கள் நம்பிக்கை வைக்க முடியாது என்ற சந்தர்ப்பம், ஏற்பட்டுள்ளது. எனவே எம்மைப் பொறுத்தவரையில் சர்வதேசத்தின் மத்தியில் எடுத்துரைத்துள்ளோம். தற்போது பந்து எங்கள் கையில் இல்லை அது சிங்களத் தலைவர்களிடத்தில்தான் உள்ளது. எனவே தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் தமிழர்களோ, தமிழ் தலைமைகளோ இல்லை அதற்குக் காரணம் சிங்களத் தலைவர்களேதான் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.  என அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

















SHARE

Author: verified_user

0 Comments: