15 Jul 2019

கலைமகள் வித்தியாலயத்திற்கு மூன்று மாடிக் கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா.

SHARE
கலைமகள் வித்தியாலயத்திற்கு மூன்று மாடிக் கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா.
கடுமையாக முற்சி மேற்கொண்டாலே அனைத்துத் திறமைகளையும் ஒருமுகப்படுத்தி தங்களது கல்விப் புலத்தில் மாணவர்கள் சிறந்த அடைவைப் பெற்றுக் கொள்ள முடியும் என மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் வி. மயில்வாகனம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பு கலைமகள் வித்தியாலயத்திற்கு “அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ்” மூன்று மாடிக் கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் விழா ஞாயிற்றுக்கிழமை 14.07.2019 இடம்பெற்றது.

வித்தியாலய அதிபர் எஸ். தில்லைநாதன் தலைமையில் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் வி. மயில்வாகனம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவரது உரையில் மேலும் தெரிவித்ததாவது,

வாக்குறுதி ஒன்றைக் கொடுப்பது இலகுவானது, இந்தப் பாடசாலைக்கு ஒரு கட்டிடத்தைக் கொடுக்க வேண்டும், பல கட்டிடங்களைத் திருத்திமையக்க வேண்டும் கூடைப்பந்து  ரெனிஸ் விளையாட்டு இரங்குகளை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று நான் அவாக் கொண்டிருந்தேன்.

அதனடிப்படையில் 30 இலட்சம் கிடைத்துள்ளது. இதனைக் கொண்டு 80 சதவீதமான திருத்த வேலைகளைச் செய்ய முடியும்.

வருட இறுதி நிதி ஒதுக்கீட்டிலும் மேலுமுள்ள திருத்த வேலைகள் மேற்கொள்ளலாம்.
மாகாண கல்விப் பணிப்பாளரிடம் இப்பாடசாலைக்குரிய அபிவிருத்திகளுக்கு டிமுன்னுரிமை கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். அதன் பலாபலன்கள் விரைவில் வந்து சேரும்.

வலயக் கல்வி அலுவலகம் பாடசாலைக்குத் தேவையான வசதிகளை பாடசாலைக் கட்டிடங்களை உபகரணங்களை, ஆசிரியர்களை வழங்குவதோடு மேலும் மேலும் வசதிகளை ஏற்படுத்தித் தர முடியும்.

ஆனால், இப்படிப்பட்ட அத்தனை வசதிகளை மட்டும் வைத்துக் கொண்டு செயற்படாமல் இருந்து மாணவர்கள் தங்கள் அறிவுப் புலமையில், தேர்ச்சியில் மிளிர முடியும் என்று எதிர்பார்க்க முடியாது.

கடுமையாக முயற்சி மேற்கொண்டாலே அனைத்துத் திறமைகளையும் ஒருமுகப்படுத்தி தங்களது கல்விப் புலத்தில் மாணவர்கள் சிறந்த அடைவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும்.
இத்கைய ஒரு அடைவு மட்டத்தை எட்டுவதற்கு ஆசிரியர்களின் பரிபூரண ஒத்துழைப்பு இருந்து விட்டால் போதுமானது.

மாணவர்கள் தமது பௌதீக வளங்களைப் பயன்படுத்துவதோடு மற்றெல்லா வாய்ப்புக்களையும் சிறந்த முறையில் வீணாக்காமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு பாடசாலை அபிவிருத்தி செய்யப்படும்பொழுது அருகிலுள்ள பாடசாலைகளும் தானாகவே அபிருத்தி- செய்யப்படும் என்பதுதான் குறிக்கோள்.” என்றார்.

இந்நிகழ்வில் உதவிக் கல்விப் பணிப்பாளர் ஆர்.ஜே. பிரபாகரன், உப அதிபர் நாகலிங்கம் இராசதுரை உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.






SHARE

Author: verified_user

0 Comments: