28 Jul 2019

அரசாங்கமானது தமிழர்கள் என்ற காரணத்தினால் நாங்கள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றோம். என முன்னாள் கிழக்கு மாகாண சபைஉறுப்பினரும், நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளருமாகிய தவராசா கலையரசன் தெரிவிப்பு

SHARE
அரசாங்கமானது தமிழர்கள் என்ற காரணத்தினால் நாங்கள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றோம். என முன்னாள் கிழக்கு மாகாண சபைஉறுப்பினரும், நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளருமாகிய தவராசா கலையரசன் தெரிவிப்பு.
அரசாங்கத்திடம் பல கோரிக்கைகளை முன்வைத்தாலும் தமிழர்கள் என்ற அடிப்படையில் நாங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றோம் என முன்னாள் கிழக்கு மாகாண சபைஉறுப்பினரும், நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளருமாகிய தவராசா கலையரசன்; தெரிவித்தார்.

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலகத்தின் செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் நிதி ஒதுக்கீட்டில் மக்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் முகமாக குறைவீடுகளை திருத்துவதற்காக காசோலை வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (26) மாலை 5 மணியளவில் இடம்பெற்றவேளை மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அவர் கருததுரைக்கையில்…
எங்களுடைய நாவிதன்வெளி பிரதேசத்தை பொருத்தவரையில் அரசியல் ரீதியாக எடுக்கப்படும் எந்த ஒரு காரியமும் சமத்துவமாக கடந்த காலங்களில் முன்னெடுக்கப்படவில்லை. ஆனால் தமிழ்தேசிய கூட்டமைப்பால் முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து வேலைகளும் இந்த பிரதேசத்தில் வாழ்கின்ற சகல மக்களையும் உள்ளடக்கியதாக சமத்துவமாக மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறான நிகழ்ச்சிகளின் மூலம் தான் இந்தப் பிரதேசத்தில் நிலையான சமத்துவத்தையும் ,சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் பேண முடியும் என்பதுதான் யதார்த்தம்.

நாங்கள் இந்த அரசாங்கத்திடம் பல கோரிக்கைகளை முன் வைத்தாலும் தமிழர்கள் என்ற அடிப்படையில் நாங்கள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றோம்.
எமது பிரதேசம் குடியேற்ற கிராமமாக பல தேவைகளை பெற வேண்டிய ஒரு பிரதேசமாக இருக்கின்றது இந்த பிரதேசத்திலே பல பணிகள் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க வேண்டி இருக்கிறது நமது கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஊடாக பல அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது .
தொடர்ச்சியாக இந்த பிரதேசத்து மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் இங்கு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ள வேண்டிய தேவைப்பாடு இருக்கிறது.எம்மால் வசதிகள் வழங்கப்பட கொண்டிருக்கின்றது.

குறிப்பாக மத்திய பிரதேசம் 30 வருட கால யுத்தத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. இன்று அதிகமான இடங்களில் காணாமல் ஆக்கப்பட்டோர் யுத்தத்தால் கொல்லப்பட்டவர் , காணாமல் ஆக்கப்பட்டோர் விடயங்கள் அதிகம் பேசப்பட்டாலும் எங்களுடைய பிரதேசத்தில் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்த பகுதியில் ஒவ்வொரு கிராமத்திலும் சுமார் 40க்கு மேற்பட்டோர் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.

இன்று வரை அந்த மக்களுக்கான இழப்பீடுகள் நிவாரணங்கள் வழங்கப்பட வில்லை என பல ஆதங்கத்துடன் இங்கு மக்கள் இருக்கிறார்கள். இவ்வான திட்டங்களுடாக அந்த மக்களையும் உள்வாங்கி அவர்களையும் பலமுள்ளவர்களாக இந்த சமூகத்தில் மாற்ற வேண்டும்.

உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கின்ற அந்த மக்களை அரவணைத்து சிறந்த ஒரு சமூதாயத்தை கட்டியெழுப்வேண்டும் மக்கள் .நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 204 பயனாளிகளுக்கு குறைபடுகளை திருத்துவதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கவீந்திரன் கோடீஸ்வரன் நிதி ஒதுக்கீட்டில் தலா 40 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கும் நிகழ்விலே இந்த கருத்தை முன்வைத்தார். 

SHARE

Author: verified_user

0 Comments: