காட்டு யானை தாக் குடும்பஸ்தர் பலி.
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள குசலானமலையடிவாரத்தில் வைத்து குடும்பஸ்தரான ஆணொருவர் மீது காட்டு யானை தாக்கியதில் அவர் ஸ்தலத்திலேயே பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புதன்கிழமை 03.07.2019 அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் பாலர்சேனை, வேப்பவெட்டுவானைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சைமன் சில்வா தயானந்த (வயது 55) என்ற தொழிலாளியே மரணித்தவராகும்.
சம்பவ தினமான அன்று இவர் வழமைபோன்று மாடுகளைப் பராமரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது காட்டுப்பகுதிக்குள் இருந்து திடீரென தோன்றிய காட்டு யானை இவரைத் தாக்கியதல் அவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
சடலம் உடற்கூறாயவுப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவித்த பொலிஸார் இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment