3 Jul 2019

இலங்கையில் மீளிணக்கத்தைப் பலப்படுத்தல் சம்பந்தமான செயல் திட்டம் மட்டக்களப்பில் செயலமர்வு

SHARE
இலங்கையில் மீளிணக்கத்தைப் பலப்படுத்தல் சம்பந்தமான செயல் திட்டம் மட்டக்களப்பில் செயலமர்வு
“இலங்கையில் மீளிணக்கத்தைப பலப்படுத்தல்” எனும் தொனிப்பொருளிலான செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களின் இணைய அலுவலகத்தில்  புதன்கிழமை 03.07.2019 இடம்பெற்றது.

ஜேர்மன் சர்வதேச ஒத்துழைப்புக்கான நிறுவனத்தின் (German International Cooperation) அனுசரணையுடன்  இடம்பெற்ற இச் செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் அரசு சாரா அமைப்புக்களின் பிரதிநிதிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்,  சர்வமத சமாதான அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த  சுமார் 30 பேர் கலந்து கொண்டனர்.

இலங்கையில் மீளிணக்கத்தைக் கட்டியெழுப்புவதில் உள்ளுர் செயற்பாட்டாளர்களின் கருத்துக்களைப் பெற்று அவற்றை செயற்பாட்டுத் திட்டமாக வடிவமைப்பதே இந்த செலமர்வின் நோக்கமென்று ஜேர்மன் சர்வதேச ஒத்துழைப்புக்கான நிறுவனத்தின் (German International Cooperation)   நிறுவன அபிவிருத்திக்கும் கற்றலுக்குமான இணைப்பாளர் ((Coordinator for Institutional Development and Learning)  சிவப்பிரசாந்தி தம்பி தெரிவித்தார்.

பல்லின சமுதாயத்தினர் வாழும் இலங்கையில் மீளிணக்கத்தைப் பலப்படுத்தும் திட்டங்களை இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்கத்துக்கான அமைச்சினூடாக நாடு முழுவதிலும் அமுல்படுத்துவதற்கு ஏற்ற வகையில் இத்தகைய கருத்தாடல்கள் நாடு முழுவதிலும் இடம்பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இச்செயலமர்வில் ஜேர்மன் சர்வதேச ஒத்துழைப்புக்கான நிறுவனத்தின் (German International Cooperation)   நிறுவன அபிவிருத்திக்கும் கற்றலுக்குமான இணைப்பாளர் (Coordinator for Institutional Development and Learning) சிவப்பிரசாந்தி தம்பி, இலங்கை அபிவிருத்திக்கான உதவு ஊக்க மையத்தின் இணைப்பாளர் ஏ. சொர்ணலிங்கம்,  மட்டக்களப்பு மாவட்ட அரசு சார நிறுவனங்களின் இணையத் தலைவர் கதிர் பாரதிதாசன், மாவட்ட இணைப்பாளர் எஸ்.பி. பிரசன்யா உட்பட இன்னும் பல செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.




SHARE

Author: verified_user

0 Comments: