நல்லிணக்தை ஓரிரவில் அடைந்து விட முடியாது கலாநிதி ஜோ வில்லியம் தொடர்பாடல் பயிற்சி நிலையப் நிறைவேற்றுப் பணிப்பாளர்.
நல்லிணக்கை ஒருபோதும் வன்முறைகளினாலோ வெறுப்புணர்வுகளினாலோ பெற்றுவிட முடியாத அதேவேளை அதை நல்லிணக்தை ஓரிரவில் அடைந்து விடவும் முடியாது அது தனக்குள்ளிருந்து உருவாக வேண்டும் என தொடர்பாடல் பயிற்சி நிலையப் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜோ வில்லியம் தெரிவித்தார்.
தேசிய சமாதானப் பேரவையின் “மோதல் மாற்றத்திற்கான பல் நிலைக் கூட்டு நடவடிக்கைகளைப் பலப்படுத்தல்” Consolidating Ongoing Multy -Level Partnership Actions for Conflict
Transformation Compact” எனும் செயற்திட்டத்தின் கீழ் “வன்முறையற்ற பிரயோக தொடர்பாடல் பயிற்சி நெறி”Awareness Training on Applied Non Violent Communication கண்டி லேவெல்ல பற்றிமா தியான இல்லத்தில் வெள்ளிக்கிழமை தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை (ஜுலை 5-7) வரை இடம்பெற்றது.
இப்பயிற்சி நெறியில் மட்டக்களப்பு, வவுனியா, யாழ்ப்பாணம் மலையகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட தேசிய சமாதானப் பேரவையின் சமாதான செயற்பாட்டாளர்களான தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகங்களையும் சேர்ந்த சுமார் 45 பேர் கலந்து கொண்டனர்.
தொடர்பாடல் பயிற்சி நிலையத்தைச் சேர்ந்த விமர்ஷனா ரணசிங்ஹ, ரமனுஷா பூபாலரெட்ணம், தேசிய சமாதானப் பேரவையின் கருத்திட்ட முகாமையாளர் சமன் செனவிரட்ன சிரேஷ்ட திட்ட அதிகாரி சாந்த பத்திரன, திட்ட உதவி முகாமையாளர் ரஷிகா செனவிரெட்ன, திட்ட அலுவலர் கிங்ஸ்லி ராஜசிங்கம் ஆகியோருட்பட இன்னும் சில துறைசார்ந்த வளவாளர்களும் பயிற்சி நெறிகளை வழங்கினர்.
ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இறுதிநாள் நிகழ்வில் பங்குபற்றுநர்கள் மத்தியில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்...
வன்முறையற்ற தொடர்பாடலினூடாக சமாதானத்தைக் கட்டியெழுப்புவது ஆக்கபூர்வமான விடயமாக இருக்கும் என நான் கருதுகின்றேன்
வன்முறையற்ற தொடர்பாடலை முதலில் தங்களுக்குள்ளிருந்தே ஆரம்பிக்க வேண்டும் அதுதான் மிகச் சிரமமான விடயமும் கூட. அப்படி நிரந்தரமான உள் அமைதியைக் கொண்டு வந்த பின்னர்தான் தமது குடும்பம், அயலவர்கள், பணியிடம், சமூகம் என்று புரிந்துணர்வும் இணக்கப்பாடும் அஹிம்சையும் விரிவடைய முடியும்.
பேச்சளவில், அல்லது பயிற்சி வகுப்புக்களில் கலந்து கொண்ட சான்றிதழ்களைக் கொண்டு வன்முறையற்ற தொடர்பாடலையும் புரிந்துணர்வையும் இணக்கப்பாட்டையும் ஒருபோதும் ஏற்படுத்த முடியாது. அது செயற்பாட்டில் இருக்க வேண்டும். நீங்கள் முன்னுதாரணமாக இல்லாதவரை எந்தவொரு கருமத்தையும் போதனை செய்யவோ, அதனை எதிர்பார்க்கவோ முடியாது.
சிறிதொரு விடயமாக இருந்தாலும் கூட அது சிறந்ததாக இருக்க வேண்டும்.
அதன் மூலமே மாற்றத்தைக் கொண்டு வர முடியும் நல்லிணக்கம் ஓரிரவில் வந்துவிடக் கூடியதல்ல. அது நீண்ட காலச் செயற்பாடு. தேசிய சமாதானப் பேரவையை 1995ஆம் ஆண்டிலே ஆரம்பித்தோம்.
அதேநேரம், 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்தபொழுது தேசிய சமாதானப் பேரவைக்கு இனி வேலையில்லை அதனை மூடிவிடுங்கள் என்று சொன்னார்கள். ஆனால் இன்றளவும் என்ன நடக்கிற்து என்பதை நீங்கள் கண்டு கொண்டுதானிருக்கின்றீர்கள். மற்றவர்களைப் புரிந்து கொள்ளும் தேவையானது இன்னமும் இருந்து கொண்டுதானிருக்கின்றது.
நல்லிணக்கம் சமாதானம் என்பது அது ஒரு நீண்டகாலச் செயற்பாடு அதற்குக் காலமெடுக்கும்.
நீங்கள் வாழும்பொழுதே இதனைச் செய்ய வேண்டும். நீங்கள் எங்கு வாழ்கின்றீர்களோ அதனை அங்கு சாதிக்க மடியும்.
உங்களது சொந்தத் தேவைகளையும் மற்றவர்களின் தேவைகளையும் புரிந்துகொண்டு ஒப்புரவுக்கான வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுப்பதே வன்முறையற்ற தொடர்பாடலின் வழிமுறையாகவுள்ளது.
இதனைச் சரிவர இனங்கண்டு அதன்படி பணியாற்றுவோமாகில் நல்லிணக்கம் என்பது சவாலாக இருக்காது. நல்லிணக்கத்தையும், வன்முறையற்ற தொடர்பாடலையும் வாழ்வின் வழிமுறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.” என்றார்.
0 Comments:
Post a Comment