24 Jul 2019

இலங்கையில் 30 வருடங்கள் ஆயுத யுத்தம் 10 வருடங்கள் சமாதான யுத்தம் - அமைச்சர் மனோ கணேசன்.

SHARE

நான் தொடர்ச்சியாக மக்களுக்காக உழைத்துக் கொண்டடிருக்கின்றேன். அதன் காரணமாகத்தான் என்னால் பறவையாக பறக்கவும், மீனாகவும் நீந்தவும், புலியாகவும பாயவும் முடிகின்றது. காரணம் இலங்கை முழுவதும் நான்  மக்களுக்காக உழைக்கின்ற காணரத்தினால்தான் அது என்னால் முடிகின்றது. என்னைப்போல் எல்லா மக்கள் பிரதிநிதிகளும் மக்களுக்காக உழைக்கவேண்டும். 30 வருடங்கள் யுத்தம் நடைபெற்றது. யுத்தம் முடிவுற்றும் 10 வருடங்கள் கழிந்துவிட்டன. எனவே இதுவரையில் 40 வருடங்கள் கழிந்துவிட்டன. இவற்றுள் 30 வருடங்கள் ஆயுத யுத்தம், 10 வருடங்கள் சமாதான யுத்தம் நடைபெற்றுள்ளது.  இந்த 40 வருடங்கள் காரணமாக தமிழ் மக்கள் வேலைவாயப்பு, உட்கட்டமைப்பு, கல்வி, உள்ளிட்ட எல்லா துறைகளிலும் பின்தங்கிவிட்டார்கள்.  என  தேசிய ஒருமைப்பாடு  அரச கரும மொழிகள் சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மட்.பட்.திருப்பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்தில் தேசிய ஒருமைப்பாடு  அரச கரும மொழிகள் சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சின் 7 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் நிருமாணிக்கப்பட்ட இருமாடி வகுப்பறைக் கட்டடத்தைத் திறந்துவைக்கும் நிகழ்வு திங்கட்கிழமை (22) நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்….

தற்போதுதான் தமிழ் மக்கள் கொஞ்சமாக தலையெடுத்துக் கொண்டிருக்கின்றார்ர்கள். எனவே  ஏனையவர்களைவிட தமிழ் மக்களுக்கு அரசாங்கம் பணியாற்றவேண்டும், ஒதுக்கீடுகளைச் செய்யவேண்டும். ஒரு குடும்பத்தில் பிள்ளைகள் சிலவேளைகளில் ஒரு குழந்தை பலவீனமாக இருக்கும் அந்தக் குழந்தையைத்தான் பெற்றோர் நன்கு கவனிப்பாரர்கள். அதுபோல் இலங்கைத்தாய்க்கு தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிங்கள் என்று மூன்று குழந்தைகள் இருக்கின்றார்கள், இதில் யுத்தம் காரணமாக தமிழர் என்ற குழந்தை வளர்ச்சி குன்றியிருக்கின்றது. குறிப்பாக வடக்கு கிழக்கிலே அதுவும் மட்டக்களப்பு மாவட்டத்திலேதான் அதிகமகவுள்ளன. யுத்தத்தின் கோர வடுக்கள் எல்லா இடத்திலும் உள்ளன. எனவே கோரவடுக்களைச் சுமந்து கொண்டு வளர்சசிகுன்றிய இந்த மாவட்டங்களில் மேலதிக  ஒதுக்கீடுகளைச் செய்து சலுகைகளைக் காட்டவேண்டிய கடப்பாடு, இலங்கைத் தாய்க்கு இருக்கின்றது. குடும்பத்தில் தாய் எவ்வாறு வளர்ச்சிகுன்றிய பிள்ளைக்கு சேவை செய்கின்றாளோ அதுபோல் இலங்கைத்தாய் தமிழ் மக்கள் மீது காட்டவேண்டும். சமத்துவம் என்ற ரீதியில் போலி சமத்துவத்தை அனைவருக்கும் ஒரேமாதிரி பார்க்க முடியாது. 

பிள்ளைகள்தான் எமது செல்வம், நாட்டில் ஏனையவசதிகள் இருந்தும் மக்கள் இல்லை என்றால் ஒன்றும் செய்யமுடியாது. இதனைப் புரிந்து கொள்ளாதவர்கள் சிலர் மண்ணுக்காச் சண்டைபோட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நாட்டிற்குள் தமிழ் மண்ணும், சிங்கள மண்ணும், இஸ்லாமிய மண்ணும்இருக்கின்றது எனவே எல்லா மண்ணும் இணைந்தால்தான் சிறந்த நாடாக அமையும். எனவே அனைவரும் புரிந்து கொண்டால்தான் ஏனைய இனத்தவர்களுடன் இணைந்து சிறந்த நாட்டைக் கட்டியெழுப்பலாம். பாடசாலைகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்டும்போது பாடசாலைகளை மையமாகக் கொண்டு நியமிக்கவேண்டும்.  மொழி, கலாசாரம், போன்றபல விடையங்களைக் கருத்தில் கொண்டு தமிழ் பாடசாலைகளில் தமிழ் ஆசியரியர்களையும், சிங்களப் பாடசாலைகளில் சிங்கள ஆசிரியர்களையும், முஸ்லிம் பாடசாலைகளில் முஸ்லிம் ஆசிரியர்களையும் நியமிக்கவேண்டும். பாடசாலைகளில் போதிய வளங்களிருந்தும் கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் இல்லை என்றால் என்னசெய்வது. இதனை இந்த மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதிகள் பேசவேண்டும். பேசாமல் தூங்கிக் கொண்டிருந்தல் ஒன்றும் செய்யமுடியாது. 

ஜனாதிபதி ஏதும் அபிவிருத்தித்திட்டங்கள் செய்து தருவதாக வாக்குறுதியளித்தால் அதனை அவர் செய்துதரவில்லை என்றால் அதனை அவரிடம்தான் கேட்கவேண்டும், அதனை நான் அவரிடம் கேட்பதற்கு நான் ஜனாதிபதியின் செயலாளர் அல்ல. எனது அமைச்சிடம் கேட்டால் அதுபற்றி நான் பதிலளிப்பேன் எனக்கு தமிழ் திமிர் இருக்கின்றது. அது சிங்களமக்களையோ, முஸ்லிம் மக்களையோ கருவறுக்கும் திமிர் அல்ல அவர்களை அரவணைக்கும் திமிராகும். என அவர் தெரிவித்தார்…

மட்.பட்.திருப்பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலய அதிபர் ஆ.புட்கரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள் சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன், தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள் சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சின் மேலதிக செயலாளர்களான இ.ரவீந்திரன், சக்திகலா ரூப சிங்க, போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி, பட்டிருப்பு வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம், மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விச் சமூகத்தினர் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

Author: verified_user

0 Comments: