மட்டக்களப்பு தாந்தாமலை அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் 2019
கிழக்கிலங்கையின் பிரசித்தி பெற்றதும் தொன்மை வாய்ந்ததுமான சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவமானது திருக்கொடியேற்றும் நிகழ்வுடன் இன்று (25) வியாழக்கிழமை ஆரம்பமாக உள்ளது.
ஆடகசௌந்தரி அரசியாலும் முற்காலத்து முனிவர்களாலும் தான்டகிரி என்று அழைக்கப்பட்டதும் தற்காலத்தில் சின்னக்கதிர்காமம் என்றழைக்கப்படும் செந்நெல் விளை நிலங்களினாலும் அழகிய மலைத்தொடர்களினாலும் சூழப்பெற்று இயற்கை எழில் நிறைந்ததும் வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்வாலயத்தின் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக 20 நாட்களாக திருவிழாக்கள் இடம்பெற்று 15.08.2019 ஆம் திகதி முருகப்பெருமானின் மகோற்சவப் பெருவிழா தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவு பெறவுள்ளது.
தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின்போது மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து பெருந்திரளான பக்தர்கள் வழமையாக வருகை தருகின்றமை சிறப்பம்சமாகும் என்பதுடன், பலத்த பாதுகாப்பின் மத்தியில் இவ்வாண்டிற்கான மகோற்சவப் பெருவிழா நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது என்பதை ஆலய நிருவாக சபை வட்டாரத்தின் மூலமாக அறிய முடிகின்றது.
0 Comments:
Post a Comment