1983 ஆம் ஆண்டு கறுப்பு யூலை 36 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.
1983 ஆம் ஆண்டு கறுப்பு யூலை 36 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (23) ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு வெல்லாவெளியில் அமைந்துள்ள மட்டு.அம்பாறை மாவட்டக் காரியாலயத்தில் நடைபெற்றது.
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சளார் ப.கோணோஸ்பரன், தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசைப உறுப்பினர் மா.நடராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது 1983 ஆம் ஆண்டு கறுப்பு யூலைக் கலவரத்தில் உயிரிழந்தவர்களுக்கு சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தி, நினைவுரைகளும் இடம்பெற்றன.
0 Comments:
Post a Comment