தமிழர்களின் இனப்படுகொலை ஆரம்பிக்கப்பட்டது 1956 ஆம் ஆண்டு – அரியநேத்திரன்.
தமிழர்களின் இனப்டுகொலை ஆரம்பிக்கப்பட்டது 1956 ஆம் ஆண்டு அப்போது சிறி எதிர்ப்பு போராட்டத்தின் போது ஆரம்பிக்கப்பட்ட அந்த இனப்படுகொலையானது, படிப்படியாக மாற்றமடைந்து 1977 ஆம் ஆண்டு பல இயக்கங்களால் தமிழீழ விடுதலைப் போராட்டங்கள் பல முன்நெடுக்கப்படுகின்றபோது இனப்படுகொலைகள் முன்நெடுக்கப்பட்டிருக்கின்றது. யூலை இனக்கலவரம் என்பது சிங்கள பேரினவாதத்தனி; உச்சக்கட்டமாக அது பார்க்கப்பட்டது. கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியிலிருந்த தமிழர்கள் படுகொலை செய்ய்பட்டார்கள், வெலிக்கடைச் சிறையில் வைத்து குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் போன்றவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இதன்மூலம் வடகிழக்கு தாயகந்தான் தமிழர்களுக்காக இருப்பிடம் என்பதை கிங்கள nபினவாதம் அந்த படுகொலைகள் வாயிலாக நிரூபித்திருந்தது.
என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு யூலையின் 36 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (23) ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வெல்லாவெளியில் அமைந்துள்ள அக்கட்சியின் காரியாலயத்தில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….
தமிழர்களின் ஈழ விடுதலைக்காக 36 இயக்கங்கள் போராடினார்கள் இறுதியாக தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய தியாகங்களைச் செய்து போராட்டங்களை நடாத்திய காலப்பகுதிகளிலெல்லாம் தமிழ் மக்களை இலக்குவைத்து இனப் படுகொலை செய்த வரலாறுகள் இருக்கின்றன. மாறி, மாறி ஜனாதிபதியாக வந்தவர்களின் காலங்களில் யார் தமிழ் மக்களைபோட்டி போட்டு கொலைசெய்தோம் என்ற வரலாறுகள்தான் இருந்து வந்துள்ளது.
2009 இற்குப் பின்னர்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முழு நேர அரசியல் பணி செய்கின்றது. அதற்கு முன்னர் நாங்கள் முழுநேர அரசியல் பணி செய்யவில்லை. அப்போது தமிழீழ விடுதலைப் புலிகள்தான் அரசியல் பணி செய்திருந்தார்கள். 22 நாடுகள் இணைந்து தமிழீழ விடுதலைப் புலிகளை மௌனிக்கச் செய்தார்கள், தற்போது யுத்தம் முடிவுற்று 10 வருடங்கள் கழிந்த பின்னரும், சர்வதேசத்திற்கு இலங்கை அரசாங்கம் கொடுத்த வாக்குமூலம் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை. தமிழர்களின் பிரச்சனை ஐ.நா மனச்சாட்சியைத் தட்டிக் கொண்டிருக்கின்றது. இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலுப்படுத்திக் கொண்டிருக்கின்றது. ஆனால் இன்றுவரை அரசியல் தீர்வற்ற சமூகமாக நாங்கள் இருந்து கொண்டிருக்கின்றோம்.
கொடூர இனப்பெடுகொலையைச் செய்துகொண்டிருந்த மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிக்க வேண்டும், எமது அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படல் வேண்டும், காணாமல் போனவர்களுக்கு சரியான நீதி வழங்கப்படல் வேண்டும், வடகிழக்கு இணைந்த தாயகத்தில் அரசியல் தீர்வு வழங்கப்படல் வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீழ் கட்டமைப்புக்கள் செய்யப்படல் வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்துதான் நாங்கள் மைத்திரிபால சிறிசேன அர்களுக்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்கினோம் ஆனால் எவும் நடைபெறவில்லை. இவ்வாறு தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுக் வருகின்றார்கள். மீண்டும் யார் ஜனாதிபதியாக வந்தாலும், தமிழ் மக்களின் அரசியல் தீர்வை மறப்பதும், அதை விட்டுச் செல்வதும், இனவாதத்தைக் கக்குவதுமாகத்தான் எந்தக் கட்சியிலாவது ஒருவர் மீண்டும் ஜனாதிபதியாக வருவார். தந்தை செல்வாவினால் ஆரப்பிக்கப்பட்டு, தலைவர் பிரபாகரனால் முன்னெடுக்கப்பட்டு, தற்போது சம்மந்தன் ஐயாவினால் இராஜந்திர அரசியல் பயணம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் தீர்வுகள் சர்வதேசத்தின் மனச்சாட்சியல் வைக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் வடகிழக்கு மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டம் ஒரு உல்லாச அரசியல் விடுதியாக மாறியுள்ளது. பலர் வருகின்றார்கள் வந்து திருவிழாக் காலங்களில் கடைதிறப்பது போன்று கடைகளைத் திறக்கின்றார்கள் (கட்சிக்காரியாலயங்கள்) இதனால் தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிப்பதற்று திட்டமிட்டுள்ளார்கள். இதில் எமது மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும்.
மட்டக்களப்புக்கு தமிழ் அமைச்சர்கள் வந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை விமர்சித்து விட்டுச் செல்கின்றார்கள். ஐக்கிய தேசியக் கட்சியை சேலேன் போட்டுக் காப்பாற்றியது தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தான் என சிங்கள தலைவர்கள் கூறுகின்றார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இல்லாவிட்டால் அவர்கள் அமைச்சர்களாக வந்திருக்க முடியாது. என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment