கரடியனாறு சேவைக்கால பயிற்சி நிறுவகத்தில் சேதன வீட்டுத் தோட்டம் தொடர்பில் விவசாயிகளுக்கு பயிற்றி!
சேதன வீட்டுத் தோட்டத்தினை செயற்படுத்தல் தொடர்பான ஒருநாள் பயிற்சிக் கருத்தரங்கு கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் கரடியனாறு சேவைக்கால பயிற்சி நிறுவகத்தில் வெள்ளிக்கிழமை (14) நடைபெற்றது
கிழக்கு மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் இரா.ஹரிகரனின் திட்டமிடலில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆயித்தியமலை, கரடியனாறு ஆகிய விவசாய போதனாசிரியர் பிரிவிலிருந்து வருகைதந்த விவசாயிகள் இதில் கலந்து கொண்டனர்.
இங்கு நடைபெற்ற கருத்தரங்கைத் தொடர்ந்து அவ்விவசாயிகளுக்கு செய்முறைப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன. இதில் குறிப்பாக சேதன முறையிலான பசளை தயாரித்தல் மற்றும் கிருமி நாசினி தயாரித்தல் உள்ளிட்ட செய்முறைப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
வீடுகள் தோறும் வீட்டுத் தோட்டங்களை அமைப்பதன் மூலம் எமக்குத் தேவையான நஞ்சற்ற மரக்கறிவகைகளை நாம் உற்பத்தி செய்யமுடியும் என்பதுடன் மேலதிக உற்பத்தியாகும் மரக்கறிகளை விற்பனை செய்து குடும்ப வருமானத்தை அதிகரிக்கச் செய்யலாம் என இக்கருத்தரங்கில் கலந்துகொண்ட பயிற்சி முகாமையாளர் க.கருணாகரன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கரடியனாறு சேவைக்கால பயிற்சி நிறுவகத்தின் பயிற்சி முகாமையாளர் க.கருணாகரன், உதவி பயிற்சி முகாமையாளர் து.பிரதீபன், விவசாய போதனாசிரியர்கள், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
0 Comments:
Post a Comment