போதையிலிருந்து விடுபட்ட நாட்டினை உருவாக்கும் செயற்றிட்டம்.
ஜனாதிபதியின் எண்ணக் கருவிற்கமைய போதையிலிருந்து விடுபட்ட நாட்டினை உருவாக்கும் செயற்றிட்டத்தின் கீழ் போதைப்பொருள் ஒளிப்பு வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட போதைப் பொருள் ஒளிப்பு விழிப்புணர்வு நிகழ்வு வியாழக்கிழமை(27) மாலை ஓந்தாச்சிமடம் கடற்கரையில் இடம்பெற்றது.
முண்முனை தென்எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமத்தி சிவப்பிரியா வில்வரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் ஞா.யோகநாதன், மற்றும், பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்கள், பொதுமக்கள், இளைஞர் யுவதிகள், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது போதைப் பொருள் எதிர்ப்பு தொடர்பில் பட்டிமன்றமும், வீதி நாடகமும், இடம்பெற்றதோடு, மாணவர்களுக்கான சித்திரப் போட்டிகளும், இடம்பெற்றன். இதன்போது வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.
0 Comments:
Post a Comment