உஸ்னமான காலநிலைக்கு மத்தியில் கடும் வரட்சி நிலவுகின்றது.
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் வெயிலுடன் கூடிய உஸ்னமான காலநிலை நிலவி வருகின்றது. இவற்றுக்கு மத்தியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியிலுள்ள சிறிய குளங்கள் முற்றாக வற்றியுள்ளன.
அந்த வகையில் போரதீவுப்பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட பெறுகாமம் எனும் இடத்தில் அமைந்துள்ள குளம் வற்றிவருகின்ற நிலையில் அதில் அப்பகுதி மக்கள் கரப்பு, அத்தாங்கு, மற்றும் சிறிய வலைகள் போன்ற பாரம்பரிய மீன்பிடி உபகரணங்களைக் கொண்டு அக்குளத்திலுள்ள மீன்களை திங்கட்கிழமை (24) பித்தனர்.
இந்நிலையில் அப்பகுதியில் அமைந்துள்ள கோவில் போரதீவுக்குளம், பெரியபோரதீவு பெரியகுளம், வெல்லாவெளிகுளம், பழுகாமத்தில் அமைந்துள்ள குளங்கள் அனைத்தும் முற்றாக வற்றியுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.
இது இவ்வாறு இருக்க குளங்கள், வாய்க்கால்கள் அனைத்து நீரின்றி வற்றிப்போயுள்ள நிலையில், கிணறுகளும் வற்றிப்போயுள்ளன. இந்நிலையில் போரதீவுப்பற்றுப் பிரதேச சபையினால் பொதுமக்களுக்கு வவுச்சர்கள் மூலம் குடி நீர் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment