14 Jun 2019

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் தேசிய ஊழியர் சங்கப் பிரதிநிதிகளால் மேற்கொள்ளப்பட்ட பணிப்பகஷ்க்கரிப்பு கிழக்கு மாகாணத்தில் தோல்வி.

SHARE
இலங்கைப் போக்குவரத்துச் சபையின் தேசிய ஊழியர் சங்கப் பிரதிநிதிகளால் மேற்கொள்ளப்பட்ட பணிப்பகஷ்க்கரிப்பு கிழக்கு மாகாணத்தில் தோல்வி.
இலங்கைப் போக்குவரத்துச் சபையின் தேசிய ஊழியர் சங்கப் பிரதிநிதிகளால் நாடளாவியரீதியில் மேற்கொள்ளப்பட்ட பணிப்பகிஷ்க்கரிப்பு கிழக்கு மாகாணத்தில் வியாழக்கிழமை(13) தோல்வி யடைந்துள்ளது. இலங்கை போக்குவரத்து சபையினர் புதன்கிழமை(12) முதல பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஷ்க்கரிப்பினை மேற்கொண்டிருந்தனர் அதேவேளை வியாழக்கிழமை கிழக்கு மாகாணத்தில் பணிப்பகஷ்க்கரிப்பு இன்றி வழமைபோல் மட்டக்களப்பு பஸ் நிலையத்திலிருந்து சகல உள்ளுர் சேவைகளும் தூர இடங்களுக்கான சேவைகளும் வழமைபோல காலையிலிருந்து  மேற்கொண்டிருந்தன.

இப்பணிப்பகிஷ்க்கரிப்பினை புறக்கணித்த மட்டக்களப்பு ஊழியர்கள் மக்களுக்கான போக்குவரத்துச் சேவையினை வழங்கியதனால் மக்கள் தங்களது அன்றாட கடமைகளை இலகுவாக மேற்கொள்கின்றனர். வியாழக்கிழமை பணிப்பகிஷ்க்கரிப்பினை முன்னெடுத்திருந்தால் தூர இடங்களுக்கு தொழிலுக்குச் செல்லும் உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் தனிப்பட்ட பிரயாணிகளென, பலரும் பெரும் பாதிப்புள்ளாகியிருப்பார்கள். இவ்வாறான செயற்பாடுகளிலிருந்து மக்களைப் பாதுகாக்க அரசாங்கம் மக்கள் பிரதிநிதிகள் உரியகவனம் எடுக்க வேண்டுமெனவும் இவேளையில் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றர்.











SHARE

Author: verified_user

0 Comments: