ஞாயிற்றுக்கிழமை (02) மரணமடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள்; வழங்கற் பகுதிப் பொறுப்பாளர் அஜித் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஒன்று மட்டக்களப்பில் செவ்வாய்க்கிழமை(04) மாலை இடம்பெற்றுள்ளது.
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் வெல்லாவெளியில் அமைந்துள்ள மட்டு.அம்பாறை மாவட்டக் காரியாலயத்தில் வைத்து அன்னாரது உருவப் படத்திற்கு ஈகைச் சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தி அகவணக்கம் செலுத்தப்பட்டன.
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டு.அம்பாறை மாவட்ட இணைப்பாளர் நா.நகுலேஸின் ஏற்பாட்டில் இடட்பெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மார்கண்டு நடராசாவும் இதன்போது கலந்து கொண்டு அஞசலி செலுத்தினார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள்; வழங்கற் பகுதிப் பொறுப்பாளர் அஜித் அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை(02) முல்லைத்தீவு புதுக்குடியிரு;பிப்பில் சுகயீனம் காரணமாக மரணமடைந்த அன்னாரது நல்லடக்கம் செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment