மீன்வளர்ப்பு திட்டம் என்ற போர்வையில் சட்டவிரோத மணல் வியாபாரம்.
மீன்வளர்ப்பு திட்டம் என்ற போர்வையில் தோண்டப்படும் பாரிய குழிகளிலிருந்து எடுக்கப்படும் மணலை சட்டவிரோதமாக விற்பனை செய்வதை தடைசெய்யுமாறுகோரி மட்டக்களப்பு- பலாச்சோலை கிராமத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டமொன்றை இன்றையதினம் நடத்தியுள்ளனர்.
ஏறாவூர்பற்று - செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பலாச்சோலை கிராமத்தைச்சேர்ந்த பொதுமக்களே இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பலாச்சோலைக்கிராமத்தின் மூன்று இடங்களில் சில நபர்கள் காணிகளை கொள்வனவு செய்து மீன்வளர்ப்புத் திட்டத்துக்கான அனுமதியினைப் பெற்று கடந்த ஒன்றரை வருடகாலமாக பாரிய குழிகளைத் தோண்டுகின்றனர்.
இக்குழிகளிலிருந்து எடுக்கப்படும் மணல் வெளிமாவட்டங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
மணல் வியாபாரிகளின் இந்த நடவடிக்கையால் மழைகாலத்தில் பலாச்சோலைக்கிராமம் முற்றாக வெள்ளத்தில் மூழ்கும் அபாயநிலை ஏற்படுவதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக பிரதேச செயலாளர் உள்ளிட்டபல அதிகாரிகளிடம் முறையீடு செய்துள்ளபோதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment