21 Jun 2019

போசாக்கு குறைவான மக்கள் வாழும் மட்டக்களப்பு பகுதிகளில் விசேடதிட்டத்தினை அமுல்படுத்த ஜனாதிபதி செயலகம் நடவடிக்கை.

SHARE
போசாக்கு குறைவான மக்கள் வாழும் மட்டக்களப்பு பகுதிகளில் விசேடதிட்டத்தினை அமுல்படுத்த ஜனாதிபதி செயலகம் நடவடிக்கை. 
போசாக்கு குறைவான மக்களுக்குரிய போசாக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் விசேட திட்டங்களை இனம் காணப்பட்ட போசாக்கு குறைவான மக்கள் வாழும் எட்டு மாவட்டங்களில்  அமுல்படுத்த ஜனாதிபதிசெயலகம் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது.

இதன்படி இனம்காணப்பட்ட அனுராதபுரம், மன்னார், இரத்தினபுரி நுவரெலியா, ஹம்மாந்தோட்டை, கிளிநொச்சி, மட்டக்களப்பு, மொனராகலை ஆகிய எட்டு மாவட்டங்களில் இந்த விசேட திட்டத்தை அமுல்படுத்த ஜனாதிபதி செயலகம் முன்வந்துள்ளது.

இதற்கமைய போசாக்குகுறைவான மக்கள் வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த விசேடதிட்டத்தினை அமுல்படுத்துவது பற்றி திட்டமிடும் விசேட செயலமர்வொன்று வெள்ளிக்கிழமை (21) மாவட்ட செயலகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்.திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது.

இச்செயலமர்வில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்.திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி, வேல்ட்விசன் சர்வதேச தொண்டார்வ நிருவணத்தின் பிராந்திய முகாமையாளர் ஜே.ஏ.ரமேஸ்குமார். மற்றும் பிரதேச செயலாளர்கள், உதவிபிரதேச செயலாளர்கள், உதவிதிட்டமிடல் பணிப்பாளர்கள், பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.

இச்செயலம்ர்வின்போது இம்மாவட்டத்தில் உணவு மற்றும் வாழ்க்கைமுறையே சில தொற்றாநோய்களுக்கு காரணியாக அமைவதாகவும் பாடசாலைமாணவர்கள், கர்ப்பிணித் தாய்மார்களிடத்தில் போசாக்கு குறைபாடு காணப்படுவதாக இனம்காணப்பட்டதுடன், எதிர்காலத்தில் இதனைத்தடுக்க அமுல்படுத்த வேண்டிய திட்டங்களும் வகுக்கப்பட்டன. 







SHARE

Author: verified_user

0 Comments: