தெரிவுக்குழு முன்னிலையில் காத்தான்குடியிலிருந்து முக்கிய நபர்...!
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி முன்னிலையாகியுள்ளார். தற்போது அவரின் சாட்சியம் பதியப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த தெரிவுக்குழு நியமிக்கப்பட்டதிலிருந்து பல அரசியல்வாதிகளும் பிரமுகர்களும் தொடர்ச்சியாக ஒவ்வொரு அமர்விலும் சாட்சியம் வழங்கி வருகின்றனர்.
இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு தரப்பினரை இவ்வாறு அழைத்து விசாரணைகள் மேற்கொள்வதால் இரகசியங்கள் பல வெளிவருவதாகவும் இவ்வாறான விடயங்களை வைத்து ஐக்கிய தேசிய கட்சி அரசியல் செய்ய முற்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
ஆகவே இவர்களை தெரிவுக்குழு முன்னிலையில் விசாரணை செய்வதற்கு அனுமதிக்க முடியாது எனவும் இந்த குழுவை கலைக்குமாறும் கோரியிருந்தார். அவ்வாறு செய்யவில்லை என்றால் அமைச்சரவைக் கூட்டங்களை கூட்டமாட்டேன் எனவும் எந்தவொரு அரசியல் நிகழ்ச்சிகளிலும் பங்கு பற்றமாட்டேன் எனவும் தெரிவித்திருந்தார்.
இருப்பினும் இந்த தெரிவுக்குழு நாடாளுமன்றால் உருவாக்கப்பட்டது ஆகவே இதனை கலைக்குமாறு கூறுவதற்கு மைத்திரிக்கு உரிமை இல்லையென பிரதமர் ரணில் தெரிவித்திருந்தார்.
மைத்திரியின் பல கோரிக்கைகள் மற்றும் எச்சரிக்கைகளையும் மீறி இன்றுவரை தெரிவுக்குழு தனது செயற்பாட்டை மேற்கொண்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது
0 Comments:
Post a Comment