பிரதமர் ரணில் மட்டக்களப்பு இரு தேவாலயங்களுக்கு திடீர் விஜயம்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மட்டக்களப்பு சீயோன் தேவாலத்திற்கு இரண்டாவது தடவையாக உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற் கொண்ட பின்னர் அங்கிலிக்கன் தேவாலயம், சென்றல் வீதியிலுள்ள மரிய பேராலயம். ஆகியவற்றுக்கு தீடீர் விஜயம் ஒன்றை சனிக்கிழமை (29) மேற்கொண்டு மரியா பேராலயத்தில் ஞானஸ்தானம் பெறவந்த குழந்தை ஓன்றை தூக்கி ஆசீர்வசித்தார்.
கடந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் 30 பேர் உயிரிழந்து 65 பேர்வரை படுகாயமடைந்தனர். இத் தாக்குதலையடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த மே மாதம் விஜயம் மேற்கொண்டு தேவாலயத்தை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவிகளை வழங்கிவைத்தார்.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது தடவையாக சனிக்கிழமை (29) விஜயம் ஒன்றை மேற்கொண்டு இராணுவத்தினர் மேற்கொண்டுவரும் தேவாய புணர்நிர்மாண வேலைகளை பார்வையிட்டார்.
பின்னர் மட்டக்களப்கு நீதிமன்றத் தொகுதிக்கு அருகில் இருக்கும் அங்கிலிக்கன் தேவாலயம் மற்றும், சென்றல் வீதியிலுள்ள மரிய பேராலயம் ஆகியவற்றுக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு வணங்கி ஆசிர் பெற்றார்.
0 Comments:
Post a Comment