கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான வதிவிட தலைமைத்துவப் பயிற்சி கடந்த 14 ஆம் திகதி தொடக்களம்,16 ஆம் திகதி வரையில் பாடசாலையில் நடைபெற்றுள்ளது.
மாணவர்களிடையே தலைமைத்துவப் பண்பினை வளர்த்து, பாடசாலையிலும், சமுகத்திலும் சிறந்த தலைமைத்துவ வாதிகளை உருவாக்கும் நோக்கிலும், சிறந்த ஒழுக்கப்பண்பு, நீண்ட சிந்தனை, விட்டுக்கொடுப்பு, சகிப்புத்தன்மை போன்ற பல்வேறு பண்புகளை வளர்க்கும் பொருட்டும் இவ்வதிவிட பயிற்சி வழங்கப்பட்டதாக பாடசாலையின் அதிபர் சா.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
50 மாணவர்கள் கலந்து கொண்ட இப்பயிற்சியில் தீப்பாசறையுடனான கலைநிகழ்வுகள், யோகா, தியானம், உடற்பயிற்சி போன்ற பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன.
பயிற்சியின் நிறைவில், பங்கேற்றிருந்த சகல மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment