21 Jun 2019

மட்டக்களப்பில் குண்டுவெடிப்பில் சேதமான தேவாலயத்தின் பணிகள் அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் நிதியில் ஒதக்கீட்டில் திருப்திகரமாக நடைபெறுகிறது

SHARE
மட்டக்களப்பில்  குண்டுவெடிப்பில் சேதமான தேவாலயத்தின் பணிகள் அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் நிதியில் ஒதக்கீட்டில் திருப்திகரமாக நடைபெறுகிறது.
மட்டக்களப்பு நகரில்  குண்டுவெடிப்பில் சேதமான சீயோன் தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகள் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பணிப்பில் வீட மைப்பு, நிர்மாணத்துறை அமைச்சினால் முதல்கட்ட நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட 2 கோடியே 80  இலட்சம் ரூபா நிதியில் தற்போது திருப்திகரமாக நடைபெற்றுவருவதாக இந்த தேவாலயத்தின் பிரதம போதகர். ரொசான் மனோஜ் மகேசன் வெள்ளிக்கிழமை (21) தெரிவித்துள்ளார்.

இந்த தேவாலயத்தின் புனரமைப்புப்பணிகள் அமைச்சர் சஜித்பிரேமதாசவின் பணிப்புரைக்கமைய முழுக்க முழுக்க எமது நிருவாகத்தின் ஆலோசனையில் இராணுவப்படையினரால் நடைமுறைப் படுத்தப்பட்டுவருகின்றன.

இது தவிர இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் 32 குடும்பங்களுக்கு நிரந்தர வீட்டுவசதிகளை வழங்கவும் அதில் 22 குடும்பங்களுக்கு இலவசமாக காணிவசதியும் கொண்ட வீடுகளும் வழங்கவும் மேலும் 32 குடும்பங்களுக்கு வீடுகளைபூர்த்தி செய்யவும் நிதி வளங்கவும் அமைச்சர் சஜித் பிரேமதாச நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதற்கு மேலாக குண்டு வெடிப்பையடுத்து அளவு சிறிதாயுள்ள தேவாலயத்தை வேறிடத்துக்கு கொண்டு செல்ல அரசின் காணி உதவியினை எதிர்பாத்திருப் பதாகவும் காணிவசதி கிடைத்ததும் தேவாலயமும் வேறிடத்துக்கு இடம் மாறும்.

தமது தேவாலத்தையும் மக்களையும் ஓர் ஆவிக்குரிய தலைவர் அதிமேற்றானியார் காதினால் மல்கம் ரஞ்சித் நேரில்வந்து பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒருதொகுதி பணமும் அன்பளிப்பு செய்து ஆறுதலும் வழங்கியுள்ளமை மகிழ்ச்சியை அளிக்கின்றது. என போதகர்.ரொசான் மனோஜ் மகேசன் மேலும் தனது தகவலில் தெரிவித்துள்ளார்.











SHARE

Author: verified_user

0 Comments: