(துசி)
வெல்லாவெளி பிரதேசத்தில் உள்ள இளைஞர் யுவதிகளை விளையாட்டுத்துறையில் ஊக்கப்படுத்தும் நோக்கில் பிரதேசத்தில்
உள்ள இளைஞர் கழகங்களை ஒன்றினைத்து வெள்ளிக்கிழமை (14) பிரதேச விளையாட்டு விழா சங்கர்புரம் கிராமத்தில் நடைபெற்றது.
பிரதேச செயலாளர் இராசநாயகம் ராகுலநாயகி தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன. இதன்போது அஞ்சல் ஓட்டங்கள், எலி ஓட்டம், போன்ற பல சுவாரசியமான விளையாட்டுக்கள் நடைபெற்றன.
இதன்போது உதவி பிரதேச செயலாளர் எஸ்.புவனேந்திரன்,
கணக்காளர், வெல்லnவெளி பொலிஸ் அதிகாரி, மாவட்ட விளையாட்டு அதிகாரி, மாவட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர், கோட்ட கல்வி அதிகாரி, பிரதேச மட்ட கல்வியியலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்
இதன்போது பிரதேச செயலாளர் கருத்துத் தெரிவிக்கையில்… விளையாட்டு கழகங்களுக்கு பல விடயங்களை செய்வதற்கு தாம் தயாராக இருக்கின்றோம், கழகங்களின் முழுமையான ஒத்துழைப்பு அதற்குத் தேவை என தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment