தீவிரவாதத்தை முறியடிப்பதில் கிழக்கில் முஸ்லிம்களின் பேராதரவு எமக்கு இருந்ததுகிழக்கு மாகாண பாதுகாப்புப் படையின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.பி.ஏ. ஜெயசேகர
தீவிரவாதத்தை முறியடிப்பதில் கிழக்கில் முஸ்லிம்களின் பேராதரவு முப்படையினருக்கும் பொலிஸாருக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் இருந்ததாக கிழக்கு மாகாண பாதுகாப்புப் படையின் கட்;டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.பி.ஏ. ஜெயசேகர தெரிவித்தார்.
ஏறாவூர் நகர சபையும், ஏறாவூர் சன சமூக நிலையங்களின் ஒன்றியமும் இணைந்து நடாத்திய இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்வு ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை இரவு 01.06.2019 இடம்பெற்றது.
அங்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்லாகவும் முப்படையினருக்கும் பொலிஸாருக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் ஒரு பெரிய சவாலாகவும் அமைந்த நிகழ்வொன்றை ஏப்ரல் 21ஆம் திகதி நாம் எதிர்கொண்டோம்.
மிகச் சொற்ப தொகையினரான ஒரு குழுவினர் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருந்தனர்.
அதனை அடுத்து நடந்த நிகழ்வுகளை நாம் புரிந்து கொள்ள முடிந்தது.
எமக்கு இது ஒரு சவாலாக இருந்த போதிலும் நாம் நமது பணிகளை குறுகிய நாட்களுக்குள் வெற்றிகரமாக முடித்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து மக்களின் இயல்பு வாழ்க்கையைத் தொடர்வதற்கு வழிவகை ஏற்படுத்திக் கொடுக்க முடிந்தது.
குறிப்பாக இந்த விடயத்தில் முஸ்லிம் சமூகத்தின் முழுமையான ஒத்துழைப்பு எமக்கிருந்தது.
கிழக்கில் முஸ்லிம்கள் பிரதானமாக வாழும் பிரதேசங்களில் தீவிரவாதிகளை முறியடிப்பதற்காக முஸ்லிம் மக்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் மேலோங்கியிருந்ததை நாம் குறிப்பிட்டாக வேண்டும்.
அந்த ஆதரவு நாம் நமது பணிகளைச் சிறப்பாகச் செய்து பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கு எமக்கு மிக சௌகரியமாக இருந்தது.
மக்சளின் இந்த ஒத்துழைப்புக் கிடைத்திருக்காவிட்டால் இந்த இயல்வு நிலைமையை இவ்வளவு சிக்கிரத்தில் நாம் கொண்டு வந்திருப்போhம் என எதிர்பார்த்திருக்கவே முடியாது.
நோன்பு தொழுகை தர்மம் செய்தல் என்பவை மிகவும் அர்ப்பணித்தக்க மார்க்கக் கடமைகளாகும். இதனை முஸ்லிம்கள் இந்த நெருக்கடியான கால கட்டத்தில் செய்து முடித்திருக்கின்றார்கள்.
நாங்கள் முப்படையினரும், பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இந்த நாட்டின் குடிமக்களுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்குவதில் எம்மை அர்ப்பணித்துள்ளோம்.
எந்த மதமாயினும் அதுபற்றி ஒரு பொருட்டே அல்ல குடிமக்களைப் பாதுகாக்க வேண்டியது மாத்திரம்தான் எமது முழு முதற் கடமையாகும்.
அதனை நாம் தொடர்ந்தும் உறுதிப்படுத்துவோம். மீண்டும் இந்த பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
சோதனை நடவடிக்கைகளின்போது இடம்பெற்ற சில விரும்பத் தகாத நிகழ்வுகள் குறித்தும் நாம் கரிசனையுடன் செயற்பட்டு அத்தகைய அசௌகரியங்களையும் நாம் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளோம்.” என்றார்.
இந்நிகழ்வில் சமூக வலு+ட்டல் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலான ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் வி. யூசுப், ஏறாவூர் நகர சபைத் தலைவர் இறம்ழான் அப்துல் வாஸித், ஏறாவூர் பற்று பிரதேச சபைத் தலைவரi; ரீ. நாகமணி. நகர சபை, பிரதேச சபை உறுப்பினளர்கள், சமூக ஆர்வலர்கள், மதப் பிரமுகர்கள். பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment