திருகோணமலை அக்போபுர பகுதியில் இன்று இரண்டு குழுக்களுக்கிடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த மோதலின் போது நால்வரை இன்று கைது செய்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அக்போபுரஇ கித்துல்ஊற்று தல்கஸ்வெவ போன்ற பகுதியைச் சேர்ந்த 19இ 20 மற்றும் 23 வயதுடைய நால்வரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த மோதலுக்குரிய காரணம் தொடர்பில் தெரியவருகையில்
அக்போபுர பகுதியில் ஒருவர் மோட்டார் சைக்கிளிலில் சென்ற போது ஒரு குழுவினர் அவர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து குழு மோதலாக உருவெடுத்ததுடன் இளைஞர்கள் சிலர் தமக்குள் மோசமாக தாக்கிக்கொண்டனர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களை கைதுசெய்த தாம்இ அவர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment