மாணவர் பாராளுமன்றத் தேர்தல் - 2019
மாணவர் பாராளுமன்றத் தேர்தல் 2019 மட்.பட்.வம்மியடியூற்று வாணி வித்தியாலயத்தில் வெள்ளிக்கிழமை (14) நடைபெற்றது. தேர்தல் ஆணையாளரான வித்தியாலய அதிபர் க.சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இத்தேர்தலில், தரம் 6 தொடக்கம் தரம் 9 வரையிலான மாணவர்களுக்கு ஒன்று தொடக்கம் 28 வரையிலான இலக்கங்களும், தரம் 10 தொடக்கம் தரம் 11 வரையிலான மாணவர்கள் 29 தொடக்கம் 53 வரையிலான இலக்கங்களும் வழங்கப்பட்டு வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இத்தேர்தல் மிகவும் அமைதியான முறையிலும், ஜனநாயக முறையிலும் நடைபெற்றதாகவும், இத்தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைக்ககளுக்காக பட்டிருப்புக் வலயக கல்வி அலுவலக சமூக விஞ்ஞானத்துறைக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் கலந்து கொண்டதாக வித்தியாலய அதிபரும், இத்தேர்தல் ஆணையாளருமான க.சந்திரகுமார் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment