கல்முனை பிராந்தியத்திற்கான பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய அத்தியட்சகர் ஜி.சுகுணன் நியமிக்கப்பட்டு அவர்தனது கடமைகளை உத்தியோக பூர்வமாக செவ்வாய்க்கிழமை (30) பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகராக கடந்த 8 வருடங்காக கடமையாற்றி வந்த நிலையிலையே குறித்த நியமனம் சுகாதார சேவைகள் அமைச்சினால் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
களுவாஞ்சிகுடியை பிறப்பிடமாகக் கொண்ட இவர் யாழ் பல்கலைக் கழகத்தில் தனது மருத்துவ பட்டத்தினைப்பெற்று, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்தியராக கடமையாற்றிய வேளையில் வைத்திய நிருவாக துறைசார்ந்த பட்டத்தினையும் பெற்றுக் கொண்டார்.
இதன் அடிப்படையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு 2011 ஆம் ஆண்டு வைத்திய அத்தியட்சகராக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் வைத்திய அத்தியட்சகராக தனது கடமையை பொறுப்பேற்று தற்போது வரை சுமார் எட்டு வருடங்கள் கடமையாற்றியுள்ளார்.
இவர் வைத்திய அத்தியட்கசகராக கடமையை பேறுப்பேற்கும் போது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை பௌதிக வளம், ஆளணி வளம், நிதிவளம் போன்ற வளப்பற்றாக்குறைகளுடனேயே காணப்பட்டது. இதனை மாற்றியமைக்கும் நோக்குடன் விரைந்து செயற்பட்டு தனது கடமைக்காலத்தில் அனைத்து வளங்களையும் பெற்று ஆதார வைத்தியசாலை ஏ தரத்திற்கு உயர்த்தியதோடு தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில சிறந்த வைத்தியசேவையினை வழங்கக் கூடிய வைத்தியசாலையாக மாற்றியமைத்த பெருமைக்குரியவரென வைத்திய அத்தியட்சகர் ஜி.சுகுணன் அனைவரினதும் பாராட்டினையையும் பெற்றவராவார்.
0 Comments:
Post a Comment