9 May 2019

உயிர்த்த ஞாயிறு அன்று எமது இலங்கை நாட்டின் பல இடங்களிலும் அப்பாவி மக்கள் மீது நடாத்தப்பட்ட மனிதாபிமானமற்ற மிலேட்சத்தனமான தாக்குதல்களை அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது.

SHARE
(ஜதுர்சயன்) 

உயிர்த்த ஞாயிறு அன்று எமது இலங்கை நாட்டின் பல இடங்களிலும் அப்பாவி மக்கள் மீது நடாத்தப்பட்ட மனிதாபிமானமற்ற மிலேட்சத்தனமான தாக்குதல்களை அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது.
21.04.2019ம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று எமது இலங்கை நாட்டின் பல இடங்களிலும் அப்பாவி மக்கள் மீது நடாத்தப்பட்ட மனிதாபிமானமற்ற மிலேட்சத்தனமான தாக்குதல்களை அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது. குறிப்பாக கிறிஸ்தவ சகோதரர்கள் வழிபாடுகளில் ஈடுபடும் போது மதஸ்தலங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல்கள் எமது உள்ளங்களில் நீங்காத மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. காத்தான்குடி பள்ளிவாயல்களில் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் இதன் வலியை நாம் நன்கு அறிவோம்.

என காத்தான்குடியில் அமைந்துள்ள அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பு அமைப்பின்  செயலாளர் மௌலவீ கே.ஆர்.எம்.ஸஹ்லான் றப்பானீ தெரிவித்துள்ளார். காத்தான்குடி பத்திரிய்யஹ் ஜூம்அஹ் பள்ளிவாயலில் வியாழக்கிழமை (09) நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போத அவர் மேலும் தெரிவிக்கையில்…

இஸ்லாம் சாந்தியையும் சமாதானத்தையும் போதிக்கின்ற மார்க்கமாகும். மத நல்லிணக்கத்தையும் சமூக ஒருமைப்பாட்டையும் பேணக் கூடிய வகையிலேயே இஸ்லாமியப் போதனைகள் அமைந்துள்ளன.

இஸ்லாமிய போதனைகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வன்முறைகளைத் தூண்டுவதாகவோ மற்றையவர்களின் சமய சமூக உரிமைகளைப் பாதிப்பதாகவோ, ஆதிக்கம் செலுத்துவதாகவோ அமையவில்லை.

எனினும் பிற்காலத்தில் தோன்றிய இஸ்லாமிய பெயர் தாங்கிய சில இயக்கங்களின் அடிப்படைவாதப் போக்குகள் காரணமாக இதற்கு மாற்றமாக சமய, சமூக வேறுபாடுகள், இன அடிப்படை வாதம் என்பன தோற்றுவிக்கப்பட்டு இஸ்லாமிய சமாதான தத்துவங்களுக்கு உலகளாவிய ரீதியில் பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது.

இலங்கை வாழ் முஸ்லிம்கள் வரலாற்றின் ஆரம்ப காலத்தில் இருந்தே ஒற்றுமையையும் சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் மத நல்லிணக்கத்தையும் பின்பற்றும் இஸ்லாமிய வழிமுறையான அஹ்லுஸ் ஸ{ன்னத் வல் ஜமாஅத்தைச் சார்ந்த ஸ_பித்துவ தரீகா வழிமுறையை அடிப்படையாகக் கொண்டவர்கள்.

இந்நாட்டில் முஸ்லிம்கள் வரலாறு நெடுகிலும் எல்லா சமூகங்களுடனும் இணைந்து அமைதியை விரும்பும் ஒரு சமூகமாகவே வாழ்ந்து வருகின்றனர். இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முற்பட்ட காலத்திலிருந்தே நாட்டின் சுதந்திரத்திற்காக முஸ்லிம்கள் குரல் கொடுத்துள்ளனர். அரசின் பல்வேறு துறைகளிலும் பதவிகளை வகித்து நாட்டுக்காக பணியாற்றியுள்ளனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும்பங்களிப்புச் செய்துள்ளனர். நாட்டின் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க பல அர்ப்பணிப்புகளை செய்துள்ளனர். நாட்டில் 30 வருடகாலம் இடம் பெற்ற யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் முஸ்லிம்கள் பல உயிர் இழப்புக்களையும் பொருளாதார இழப்புக்களையும் சந்தித்த போதும் பூர்வீக வாழ்விடங்களை விட்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்டபோதும் ஆயுத கலாச்சாரத்தில் நம்பிக்கை கொள்ளவில்லை.


இவ்வாறு வரலாறு நெடுகிலும் சாத்வீகமான சமூகம் என அடையாளப்படுத்தப்பட்ட முஸ்லிம் சமூகம் ஒரேநாளில் தீவிரவாத சமூகமாக பார்க்கப்படுகின்ற ஒரு துர்ப்பாக்கிய நிலை உருவாகியுள்ளது.




இந்த துர்ப்பாக்கிய நிலை உருவாக காரணமான தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த இஸ்லாமிய சாயம் பூசப்பட்ட சில தீவிரவாத அமைப்புகளேயாகும். அவர்கள் இஸ்லாத்தை தவறாக புரிந்துள்ளனர். அவர்களினது எவ்வகையான தீவிரவாத நடவடிக்கைகளையும் இஸ்லாம் ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை. அதுபோல் முஸ்லிம் சமூகமும் குறிப்பாக காத்தான்குடி முஸ்லிம் மக்களும் அங்கீகரிக்கவுமில்லை. எந்த மதமும் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை. ஒரு மதத்தை பின்பற்றும் ஒரு சிலர் தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபடுவதனால் அந்த மதமே தீவிரவாதத்தை ஆதரிக்கின்றது என அர்த்தம் கற்பிக்க முடியாது.

இத்தாக்குதல் சம்பவங்களின் சூத்திரதாரிகள் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதனாலும் பிரதான சூத்திரதாரி காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர் என்பதனாலும் நாடு முழுவதிலும் முஸ்லிம் சமூகத்தின் மீதும் குறிப்பாக காத்தான்குடி முஸ்லிம் மக்கள் மீதும் ஒரு சந்தேகப் பார்வை தோன்றியுள்ளது. நாம் இந்நாட்டு முஸ்லிம்கள் என்ற வகையில் இது தொடர்பாக சில விபரங்களை முன்வைக்க கடமைப்பட்டுள்ளோம்.

இத்தாக்குதல் சம்பவங்களில் பிரதான சூத்திரதாரியான ஸஹ்றான் என்பவர் 2011ம் ஆண்டு தேசிய தவ்ஹீத் ஜமாஅத் எனும் அமைப்பை உருவாக்கினார். இவர் முஸ்லிம்கள் மத்தியிலும் ஏனைய சமூகங்கள் மத்தியிலும் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையிலும் வன்முறைகளை தூண்டும் வகையிலும் பிரச்சாரங்களை மேற்கொண்டதுடன் இலங்கை நாட்டிற்கு எதிராகவும் சர்வதேச தீவிரவாத அமைப்பான ஐளுஐளு இற்கு ஆதரவாகவும் பிரச்சாரங்களை மேற்கொண்டார்.

இவரது தேசவிரோத தீவிரவாத செயற்பாடுகளை கண்டித்து காத்தான்குடி முஸ்லிம் மக்கள் சார்பில் 13.03.2017ம் திகதி காத்தான்குடியில் நாம் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தினோம்.

இதன்போது ஸஹ்றானை கைது செய்யுமாறும் தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தை தடைசெய்யுமாறும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் கோரிக்கைகள் விடுத்தோம். அது தொடர்பான மகஜர் ஒன்றை காத்தான்குடி பிரதேச செயலாளருக்கும், காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் கையளித்தோம்.

இதன் பின்னர் 27.03.2017ம் திகதி தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தினதும் ஸஹ்றான் என்பவரினதும் தீவிரவாத செயற்பாடுகள் தொடர்பான முறைப்பாடு ஒன்றை இலங்கை நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி, கௌரவ பிரதமர், உயர் நீதிமன்ற நீதியரசர், நீதித்துறை அமைச்சர், சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பான அமைச்சர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர், பொலிஸ் மாஅதிபர், நீதிச் சேவை ஆணைக்குழு, பயங்கரவாத தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி அனைவரிடமும் நாம் காத்தான்குடி முஸ்லிம் மக்கள் சார்பில் கையளித்தோம்.

இவர்களுக்கு எதிராக நாம் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் எமது நாட்டினதும், முஸ்லிம் சமூகத்தினதும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தூரநோக்குடன் சிந்தித்து நாம் மேற்கொண்டவைகளாகும்.

இவர்களது செயற்பாடுகள் காத்தான்குடியிலும் ஏனைய முஸ்லிம் பிரதேசங்களிலும் முஸ்லிம்களிடையேயும் பௌத்த,இந்து,கிறிஸ்தவ மக்கள் மத்தியிலும் மதக்கலவரத்தை ஏற்படுத்தும் என நாம் அச்சமடைந்தோம்.

இவர்களது வன்முறைகளும் அத்துமீறல்களும் எமது இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் இறைமையையும், பாதுகாப்பையும், நல்லிணக்கத்தையும் பாதிக்கும் என்பதுடன் மீண்டும் ஒரு வன்முறைக் கலாசாரத்தை ஏற்படுத்துவதாக அமைந்து விடும் என கவலைப்பட்டோம். இந்த விடயங்களை நாம் 27.03.2017ம் திகதி கையளித்த முறைப்பாட்டில் தெளிவாகக் கூறியிருந்தோம்.

எனவே

1) இந்நாட்டில் முஸ்லிம் சமூகமும் குறிப்பாக காத்தான்குடி மக்களும் அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராக செய்த அர்ப்பணிப்புக்களை அறிந்து, இனங்களுக்கிடையிலான சந்தேகப் பார்வைகளைக் களைந்து, பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் இதயசுத்தியுடன் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையையும், சமாதானத்தையும், புரிந்துணர்வையும், நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப வேண்டுமென வலியுறுத்துகின்றோம்.

2) உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற மனித குலத்திற்கு எதிரான துயர சம்பவத்தால் உயிரிழந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் இத்தாக்குதல்களின் சூத்திரதாரிகள் அனைவரையும் கைது செய்து எமது தாய் நாட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு வேண்டுகிறோம்.

3) இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற சூழ்நிலையில் இத்தாக்குதல் சம்பவங்களால் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்களை அமைதிப்படுத்தி, அன்பையும், சமாதானத்தையும் வலியுறுத்தி காழ்ப்புணர்ச்சிகள் வளர்ந்துவிடாமலும் முஸ்லிம்களுக்கு எதிராக இன வன்முறைகள் இடம் பெற்றுவிடாமலும் இருக்க மிகக் கரிசனையுடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட்ட பேராயர் மதிப்பிற்குரிய மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களுக்கும் நாடளாவிய ரீதியில் காணப்படும் கத்தோலிக்க திருச்சபையினருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம்.

4) பயங்கரவாத தடைச் சட்டத்தில் (Pவுயு) தேவையான திருத்தங்களை மேற்கொண்டு மத அடிப்படைவாத அமைப்புக்களையும் தீவிரவாதிகளையும் முழுமையாக இல்லாதொழிக்குமாறு அரசாங்கத்தை கோருகிறோம்.

5) நாட்டுமக்கள் அனைவரும் ஒற்றுமையையும் சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் தொடர்ந்தேர்ச்சியாக கடைப்பிடிக்குமாறும், தேசவிரோததீவிரவாத செயற்பாடுகளை இல்லாதொழிக்கவும் எமது தேசத்தை சமாதான தேசமாக கட்டியெழுப்பவும் தாக்குதல் சம்பவத்தால் ஏற்பட்டுள்ள அழிவு,பொருளாதார வீழ்ச்சி என்பவற்றிலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் அரசாங்கம் மேற்கொள்ளும் சகல நடவடிக்கைகளுக்கும் பூரண ஒத்துழைப்பை வழங்குமாறும் இவ்வூடகவியலாளர் மாநாட்டினூடாக அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பு தயவுடன் வேண்டிக் கொள்கின்றது என தெரிவித்தார்.

இதன்போது அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பு அமைப்பின் உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



















SHARE

Author: verified_user

0 Comments: