மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு சட்டதிட்டங்களை மீறி மாடுகளை லொறியொன்றில் ஏற்றிச்சென்றபோது குறித்த வாகனத்துடன் இருவரை பொலிஸார் வெள்ளிக்கிழமை (24) கைதுசெய்துள்ளனர்.
ஆயித்தியமலை பிரதேசத்திலிருந்து மணற்பிட்டி ஊடாக கல்முனை பிரதேசத்திற்கு கொண்டு செல்வதற்காக லொறி ஒன்றில் 10 மாடுகளை சித்திரவதைக்குள்ளாக்கி சட்டதிட்டங்களை மீறி ஏற்றிச் சென்றதனால் குறித்த வாகனத்தையும் அதன் சாரதி உள்ளிட்ட இருவரையும் வவுணதீவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த மாடுகளை கொண்டு செல்வதற்கு அனுமதிப் பத்திரம் இருந்த போதிலும் அதனை கொண்டு சென்ற முறை சட்டத்திற்கு எதிரானது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில்கைது செய்யப்பட்டவர்களை சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.நிசாந்த அப்புகாமி தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment