கடந்த 21 ஆம் திகதி இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தாக்குதல்களினால் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கின்றோம். இந்த தாக்குதலின் பின்னர் அது தொடர்பில் அரசாங்கம் எடுத்து வருகின்ற நடவடிக்கைகள் சில வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், இன்னும் அந்த பயங்கரவாதிகள் இருப்பதாகவே அரசாங்கம் கூறிக் கொண்டிருக்கின்றது. இந்த இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு மிக நீண்டகாலமாக இருந்திருக்கின்றது, என்பதை இந்த அராசங்கத்திற்குத் தெரிவித்திக்கின்றது.
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜின் வேண்டுகோளிற்கிணங்க நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் அவர்களின் கம்பரெலிய திட்டத்தின் கீழ் களுவாஞ்சிகுடி கிராமத்தில் 3 வீதிகள் 60 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புணரமைப்புச் செய்யப்படவுள்ளது. திங்கட்கிழமை(06) அந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைத்துவிட்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…..
தாக்குதல் நடைபெற இருக்கின்றது என்ற கருத்து பரிமாறப்பட்டதாக அண்மையில் கருணா அம்மான் சொல்லியிருந்தார். அதுபோல் இந்த தாக்குதல் நடைபெற இருக்கின்றது என ஏப்ரல் 4 ஆம் திகதி இந்திய புலனாய்வுத் துறையால் இலங்கை அரசாங்கத்திற்குத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் கடந்த காலத்தில் தமிழ் மக்கள் மத்தியிலும், தமிழ் அரசியல்வாதிகள் மத்தியிலும், புலனாய்வாhளர்கள் செலுத்திய புலனாய்வு சம்மந்தமான நடவடிக்கையை தற்போது ஏன் இஸ்லாமிய மக்கள் மீது பயன்படுத்தவில்லை என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது.
புலனாய்வாளர்களே! தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புக்கு காசு கொடுத்து அவர்களையும் புலனாய்வாளர்களாக வைத்திருக்கின்றார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்த வந்து ஒட்டுக்குழுக்களாகச் செயற்பட்ட, கருணா அம்மானின் குழுவுக்கும், பிள்ளையாளின் குழுவுக்கும், தமிழ் மக்களைப் புலனாய்வு செய்வதற்காக சம்பளம் வழங்கப்பட்டு வந்துள்ளன. தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு ஒரு ஆயுதக்குழு என்று அறிந்திருந்த காரணத்தினால்தான் இந்த அரசாங்கம், அவர்களையும் புலனாய்வாளர்களாக உள்ளீர்துள்ளார்கள்.
முன்பிருந்த கோட்டபாய ராஜபக்கஸவும், மஹிந்த ராஜபக்ஸவும், எவ்வாறு தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பை புலனாய்வாளர்களாக நியமிப்பார்கள் என்ற கேள்வி எனக்குள் எழுந்திருக்கின்றது. அவ்வாறெனில் அந்த அமைப்பு ஒரு ஆயுத அமைப்பு என்பதை அரசுக்கு எற்கனவே தெரிந்திருக்கின்றதா எனற கேள்வியும் எழுந்திருக்கின்றது. எனனெனில் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு ஒரு மத அமைப்பு என சொல்லப்பட்டிருக்கின்றது. மத அமைப்பை இன்னொரு இனத்தின் மீது எவ்வாறு புலனாய்வு செய்வதற்கு அனுப்ப முடியும்,. எனவே அனைத்து விடையங்களும் அரசாங்த்திற்கு தெரிந்திருக்கின்றது. மறாக அரசாங்கம் ஆட்சி விடையத்தில் காட்டுகின்ற அக்கறை மக்கள் மீது காட்டுகின்றதில்லை.
இந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சை வைத்திருக்கின்ற ஜனாதிபதி அவர்கள் 19 வது அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ், சட்டம் ஒழுங்கு அமைச்சை அவர் வைத்திருக்க முடியாது. ஆகவே பாதுகாப்பு அமைச்சையும். சட்டம் ஒழுங்கு அமைச்சையும் வைத்துக் கொண்டு தற்போது துன்பியல் சம்பவம் நடந்தபொழுது நாடகம் ஆடப்படுகின்றது. நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஜனாதிபதியோ, பிரதமரோ, தமக்கு எதுவும் தெரியாது என்று சொல்ல முடியாது. மகிந்த ராஜபக்ஸவுக்குத் தெரியும் அளவிற்கு ஏன் மைத்திரிபால சிறினேவுக்குத் தெரியாமல் போனது. ஆகவே அரசாங்கத்திற்கு இச்சம்பவங்கள் தொடர்பில் ஏற்கனவே தெரிந்திருக்கின்றது. அரசாங்கம் அதனை மறைத்திருக்கின்றது. ஏனெனில் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்ட மக்கள் தமிழ் மக்கள். கிறிஸ்தவ தேவாலயங்களில் சிங்கள வழிபாடு இருக்கின்றது, தமிழ் வழிபாடு இருக்கின்றன. தாக்குதல்கள் அனைத்தும் தமிழ் வழிபாட்டின்போதேதான் இடம்பெற்றிருக்கின்றன. ஒட்டுமொத்தமாக ஆராய்ந்தால் தமிழ் மக்கள் பலிக் கடாவாக்கப் பட்டிருக்கின்றார்கள்.
இஸ்லாமிய தீவிரவாதிகள் தமிழ் மக்களை மையமாக வைத்து செயற்பட்டிருக்கின்றார்கள். தற்போது பிரதான தீவிரவாதி சஹரான் உயிரோடு இருப்பதாக பாதுகாப்புத் தரப்புச் சொல்லிக் கொண்டிருக்கின்றது. அவர் இருந்த காத்தான்குடியை இப்போதான் மெல்ல மெல்ல பாதுகாப்புத் தரப்பினர் சுற்றிவளைப்புக்களைச் செய்கின்றார்கள். இச்சம்பவம் நடைபெற்ற உடனேயே முழு சுற்றிவளைப்புக்களைச் செய்திருந்தால் பலரைக் கைது செய்திருக்கலாம், பல பொருட்களையும் கைப்பற்றியிருக்கலாம். பொருட்களெல்லாம் மெல்ல மெல்ல நகர்த்தப்பட்ட பின்னர்தான் தேடுதல் நடைபெறுகின்றன. ஓட்டமாவடி, வாழைச்சோனை முஸ்லிம் பிரதேசம், ஏறாவூர், போன்ற பகுதிகளிலெல்லாம் தேடுதல் நடவடிக்கைகள் முன்றாக முடிக்கப்படவில்லை.
இந்நிலையில் கடந்த காலங்களில் தமிழ் மக்களின் அத்தனை இடங்களும், மிகத் தீவிரமாகப் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன. முகமூடி கொண்டு தமிழர்களை ஆட்டித்திருந்தார்கள், பொலிசாரும் இராணுவதினரும், அப்போது தமிழ் மக்கள் மீது செய்த தேடுதல் நடவடிக்கைகளை ஏன் இப்போது இஸ்லாமிய மக்கள் மீது மேற்கொள்ளவில்லை என்பது கேள்வியாக இருக்கின்றது. எனெனில் பின்புலத்திலே இஸ்லாமிய அரசியல்வாதிகள் இருக்கின்றார்கள். பல பெலிஸ் அரசியல்சாதிகள் இஸலாமிய அரசியல்வாதிகளின் ஆதரவாளர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் சரியாக தீவிரவாதிகளைக் கண்டுபிடிப்பார்களா என்பது மிகவும் சந்தேகத்திற்குரியாகவே இருந்த கொண்டிருக்கின்றது.
உண்மையிலே காத்தான்குடியிலிருக்கின்ற அனைத்து அரசியல்வாதிகளும் விசாரணைக்குட்படுத்தப்படல் வேண்டும். அதே போன்று எனைய இஸ்லாமிய பகுதிகளிலிருக்கின்றவர்களும் விசாரிக்கப்படல் வேண்டும். காலம் தாழ்த்த தாழ்த்த, அங்கிருக்கின்ற பயங்கரவாதிகள் வெளியேறிவிடுவார்கள், அங்கிருக்கின்ற பயங்கரவாத பொருட்களும், மாற்றப்படலாம். வீதிகளில் மாத்திரம்தான் சோதனை நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன, கடல்மார்க்கத்தைக் கவனிப்பதில்லை. எனவே அரசாங்கம் இன்னும் சரியான முறையில் நடவடிக்கை எடுக்கல்லை.
உடனடியாக ஜனாததி சட்டம் ஒழுங்கு அமைச்சை பிரதமர் தலைமையிலான குழுவிடம் கையளிக்க வேண்டும். தனது அரசியல் இருக்கையைத் தக்க வைக்க வேண்டும் என்பதற்காக பிரதமரும், இஸ்லாமிய அரசியல்வாதிகளை உடைக்கக்கூடாது என்பதற்காக இதனை பெரிதாக எடுக்காமல் இருக்கின்றார். தனக்கும் எதிர்கால அரசியல் வேண்டும் என்பதற்காக ஜனாதிபதியும் இதில் கூடிய அக்கறையில்லாமல் இருக்கின்றார். ஆனால் அனைத்து வியைடங்களும் மகிந்த ராஜபக்சவுக்குத் தெரிகின்றது. ஏனெனில் புலனாய்வுபிரிவு மகிந்தராஜபக்சவுடன் இருக்கின்றது. எனவே ஆட்சி நடத்த முடியாத பிரதமரும், ஜனாதிபதியும் இந்த நாட்டில் இருந்து என்னவேலை. ஏனவே கடந்த காலங்களில் தமிழ் மக்கள் எவ்வாறு கபரிசோதனைக்குட்படுத்தப் பட்டார்களோ அவ்வாறு இஸ்லாமிய பகுதிகளில் நடாத்தப்பட வேண்டும். அதில் அப்பாவியான இஸ்லாமிய மக்கள் பாதிக்கப்படக் கூடாது.
தற்போது பயங்கரவாத சட்டவிதிகளைப் பயன்படுத்தி பிழையாக மனித உரிமை மீறல்களும் இடம்பெறுகின்றன. அதன் ஒரு அங்கம்தான் யாழ் பல்கலைக் கழக மாணவர்களின் கைது நடவடிக்கையாகும். எனவே இவ்வாறான தேவையற்ற வேலைகளை விட்டு விடு அரசாங்கம் துரிதமான நடடிக்கைகளை எடுக்கவேண்டும் என அவர் தெரிவித்தார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரால் நல்லின மாங்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment