மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதங்குடலை வீதியில் அமைந்துள்ள மதகு ஒன்றினுள் இருந்து இளம் குடும்பஸ்த்தர் ஒருவரின் சடலம் வெள்ளிக்கிகழமை காலை(24) மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளிப் பொலிசார் தெரிவித்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் காக்காச்சுவட்டை மூன்று வீட்டுத்திட்டத்தைச் சேர்ந்த 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான பாலசுந்தரம் கரிகரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…
காக்காச்சுவட்டை மூன்று வீட்டுத்திட்டத்தைச் சேர்ந்த தந்தையான பாலசுந்தரம் கரிகரன் வெள்ளிக்கிழமை அதிகாலை அவரது வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளதாகவும், பின்னர் அவர் மருதங்குடலை வீதியில் அமைந்துள்ள மதகு ஒன்றினுள் வீழ்ந்து கிடப்பதாகவும் தாம் அறிந்ததாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் அவரது தலையில் காயம் காணப்படுவதாகவும், அவ்விடத்தில் அவர் செலுத்திச் சென்ற இஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளும் கிடப்பதாகவும் பொலிசார் தெரிவித்தானர். இவர் விபத்துக்குள்ளாகி இறந்துள்ளாரா, அல்லது கொலை செய்யப்பட்டு இறந்துள்ளாரா என்பது தொடர்பிலும், பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவுக்கு அறிவித்துள்ளதாகவும், அவர்கள் மூலமும், விசாரணைகள் மேற்கொள்ளப்பமடவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளதாகவும், நீதி மன்ற உத்தரவு கிடைத்ததும் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படும் என பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment