முஸ்லிம்களுக்கு கிழக்கு மாகாணத்தை தாரைவாத்துக் கொடுத்ததன் விளைவுதான் இந்த அராஐகக் கும்பலுடைய நாசகாரச் சதி. தமிழ் மக்கள் கையில் வடக்கு, கிழக்கு, மலையகம் அதிகாரம் இருக்குமென்றால் நிச்சயமாக இந்த நாசகாரச் சதிக்கு இடமளித்திருக்கமாட்டோம். நாங்கள் நம்பி ஏமாந்தனாங்கள். தமிழ்தேசியக் கூட்டமைப்பை நம்பி ஏமாந்தனாங்கள் என்று கூறினார் ஈழவர் ஐனநாயக முன்னணி அமைப்பின் (ஈரோஸ்) தலைவர் இராஐநாதன் பிரபாகரன்.
மட்டக்களப்பு கல்லடி வொய்ஸ் ஒவ் மீடியா நிறுவனத்தில் புதன்கிழமை(08) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில்….
நாட்டில் நடந்த அசம்பாவிதம் பொதுவாக சர்வதேச நாசகார கும்பல்களால் இலக்குவைத்து தாக்கப்பட்ட வழிபாட்டுத்தலங்கள், உல்லாச விடுதிகளில் நடந்த கொலைகளில் மரணித்த அனைத்து உறவுகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களும் கண்ணீர் அஞ்சலியும் செலுத்திக் கொள்வதோடு அவர்களது உறவுகளுக்கு எங்களது கவலைகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம். இன்று இந்த நாட்டில் ஏற்பட்டு இருக்கின்ற துப்பாக்கிய நிலைக்கு யார் காரணம் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். ஏற்கனவே கொடூர யுத்தத்தின் காரணமாக முப்பது முப்பத்தைந்து வருட காலம் தமிழ் மக்களும் ஏனைய அனைத்து சமூகங்களும் ஐனநாயக காற்று சுவாசிக்க முடியாமல் ஏற்பட்ட வலிகள் அந்த வடு இன்னும் மாறாத நிலையில் இன்று சர்வதேச ரீதியாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் அராஐகக் கும்பல் இவர்கள் விடுதலைப் போராளிகளோ அல்லது தீவிரவாதிகளோ அல்ல. இவர்களைத் தீவிரவாதிகள் என்று அழைப்பது தவறு. ஆராஜக கும்பலால் ஏற்படுத்தப்பட்ட இந்த செயற்பாட்டை முதலில் கண்டிக்க வேண்டும். அதனை நாங்கள் கண்டிக்கின்றோம்.
அதேநேரத்தில் அரசில் லாபத்திற்காக அரசியல் நோக்கம் கொண்டு இந்த பயங்கரவாதத்தை இந்த நாசகாரக் கும்பலை வளர்த்தவர்களை முதல் அடையாளம் காணவேண்டும். ஊடகங்களுக்கு தெரியும் இந்த மக்களுக்கு தெரியும் இந்த மக்களுக்கு இதே இடத்தில் வைத்து ஊடக வாயிலாக தெரிவித்தேன் முஸ்லிம் இளைஞர்கள் ஆயதமேந்துவார்கள்என்று. தற்போது ஏந்திவிட்டார்கள். இரத்த வெள்ளம் ஓடும் என்றேன். இரத்தவெள்ளம் ஓடியது. ஏன இதை பாராளுமன்றத்தில் பேசிய ஹிஸ்புல்லாவை நான் வன்மையாகக் கண்டித்ததோடு அதுமட்டுமல்லாமல் அரசாங்கத்திற்கு ஓரு வேண்டுகோள் விடுத்திருந்தேன் இவர் விசாரிக்கப்பட வேண்டும் இவருக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று. ஆனால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் புலிகளைப் பற்றி ஒரு வார்த்தை கதைத்தமைக்காக அவரை தொடர்ந்து அனாமதேய செயற்பாட்டுக்குள் அவருடைய அமைச்சுப் பதவியையும் பறித்து ஒரு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தவிட்டாhகள்.
அவர் மக்களை மீண்டும் யுத்தகளத்திற்கு அல்லது பயங்கரவாத செயற்பாட்டிற்கு கொண்டு செல்லப்போகின்றார் என்று கதைசூடியவர்கள் ஏன் இந்த பயங்கரவாத்தை தூண்டிய இந்த நபர்களை அரசாங்கம் விட்டுவைத்துக் கொண்டிருக்கின்றது. அதுமட்டுமல்லாது 2015 ஆம், 2016 ஆம் ஆண்டுகளில் துருக்கி உயர்ஸ்தானிகராலயத்தால் எமது நாட்டுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இங்குள்ள முஸ்லிம் அரசியல் தலைவர்களுடாக அல்லது அவர்களின் அனுசரணையினூடாக ஐம்பதிற்கும் மேற்பட்ட ஐஸ்.ஐஸ் தீவிரவாதிகள் எமது நாட்டுக்குள் உட்புகுந்திருக்கிறார்கள் என்று. அது கூட இன்று பாராமுகமாகத்தான் உள்ளது. இந்த ஐஸ்.ஐஸ் தீவிரவாதிகளின் ஸ்தாபனம் ஸ்தாபிக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் இன்று காணக்கூடியதாக உள்ளது. ஓல்லிக்குளம் தாழங்குடா பகுதியில் ஒரு பயிற்சி முhகம், வாழைச்சேனை ஓமனியாமடு எனும் பகுதியில் ஒரு பயிற்சி முகாம், இங்கு 110 ஜெலிக்நெட்குச்சிகள் பெறப்பட்டிருக்கின்றன. இதனை மக்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்வார்களேயானால் அதுபாரதூரமான விளைவைத் தரும். 5 ஜெலிக்நெட்குச்சிகள் போதும் ஒரு சூசைட் தாக்குதலுக்கு. 111 ஜெலிக்நெட்குச்சிகள் பெறப்பட்டது என்று சொன்னல் 20, 25 தற்கொலைத்தாரிகள் தற்கொலை நடத்துவதற்கு ஏதுவாக இருந்திருக்கிறது.
இந்த கிழக்குமாகாணத்தை பயங்கரவாதிகளுக்கு தாரைவாத்துக் கொடுத்தது யாரு? பத்துவருடகாலமாக அப்பாவி தமிழ்மக்கள், அப்பாவி முஸ்லிம் மக்கள், அப்பாவி சிங்கள மக்கள் ஓரளவிற்கு ஐனநாயகக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிற நேரம், அரசியல் ரீதியாக உங்களது உரிமைகளைப் பெற்றுக்கொள்ளலாம் அல்லது சாதித்துக்கொள்ளலாம் என்ற அடிப்படையில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு என்ற ஒன்றை உருவாக்கி தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கு அதிகாரங்களை வழங்கி எமது தமிழ்பேசும் மக்களுக்கு அதிகாரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற அடிப்படையில் கடந்த மாகாணசபைத் தேர்தலில் தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் 13 மாகாணசபை உறுப்பினர்களை வழங்கியிருந்தார்கள். ஏன் ஆட்சியமைத்து கிழக்கு மாகாணத்திலுள்ள அதிகாரங்கள் இங்கேயுள்ள தேவைகள் என்பவற்றை பூர்த்தி செய்யலாம் என்று. ஆனால் அந்த முதுகெலும்பில்லாத, வக்கில்லாத, திராணியற்;ற தமிழ்தேசியக் கூட்டமைப்பு 13 ஆசனங்களை வைத்துக்கொண்டு 7 ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட முஸ்லிம்களுக்கு கிழக்கு மாகாணத்தை தாரைவாத்துக் கொடுத்ததா இல்லையா?
இப்படியெல்லாம் தாரைவாத்துக் கொடுத்ததன் விளைவுதான் அதன் எதிரெலிதான் இந்த அராஐகக் கும்பலுடைய நாசகாரச் சதி. தமிழ் மக்கள் கையில் வடக்கு, கிழக்கு, மலையகம் அதிகாரம் இருக்குமென்றால் நிச்சயமாக இந்த நாசகாரச் சதிக்கு இடமளித்திருக்கமாட்டோம். நாங்கள் நம்பி ஏமாந்தது தமிழ்தேசியக் கூட்டமைப்பு நம்பித்தான். தமிழ்தேசியக் கூட்டமைப்பு பேச்சாளர் சுமந்திரனுக்கு நான் அடிக்கடி சொல்லிருக்கின்றேன். தமிழ் சம்பந்தமாக உமக்கு எந்த அதிகாரமும் இல்லை தீர்வை எடுப்பதற்கு. தீர்வைப் பெற்றுத் தருவதற்கோ அல்லது மக்களைப்பற்றிக் கதைப்பதற்கோ சுமந்திரனுக்கு எந்த அருகதையும் இல்லை. தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கும் அருகதையில்லை. நீங்கள் விலகிச் செல்லுங்கள்.
இன்று இந்த இலங்கை நாட்டில் மூன்று இன மக்களும் முஸ்லிம் மக்கள் மாத்திரமில்லை. மூன்று இனமக்களும் மீண்டும் ஐனநாயகக் காற்றை சுவாசித்துக் முடியாமைக்கு காரணம் இப்படிப்பட்ட சுயநலவாத சுயநல சக்திகள். வவுணதீவில் இரு பொலிசார் தாக்குதலுக்கு உள்ளாகினர். அதற்கு இரண்டு போராளிகள் கைதானார்கள். தற்போது அதனைச் செய்தவர்கள் யார் என்று தெரியும். தெரிந்தும் கூட இந்த அரசாங்கம் விடுதலை செய்யாமல் உள்ளது. இந்த அரசாங்கத்தை முண்டுகொடுத்துக் கொண்டிருக்கும் நீங்கள் நீதிமன்றம் சென்று இந்த அரசாங்கத்தைக் காப்பாற்றி இன்றைக்கும் அவர்களுடன் இருக்கும் நீங்கள் ஏன் இந்த பிள்ளைகள் இரண்டுபேரையம் எடுத்துவிட முடியாது? அதே நேரத்தில் யாம்ப்பாணத்தில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் ஏன் எடுத்துவிட முடியாது?
தமிழ் தேசியம் என்று மக்களைப் பேய்க்காட்டி அரசியல் பிழைப்பு நடத்துவதைவிட நீங்கள் ஐதேகட்சி, அல்லது சுதந்திரக்கட்சி அல்லது முஸ்லிம் காங்கிரஸ் என்று சொல்லி நீங்கள் அதில் இணைந்து கொள்ளலாம். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் தமிழ் மக்களுக்கு நல்ல தலைமைத்துவம் இல்லை ஒன்று மற்றொன்று முஸ்லிம் மக்களுக்கு நல்ல தலைமைத்துவம் இல்லை, மூன்றாவது சிங்கள மக்களுக்கு நல்ல தலைமைத்துவம் இல்லை. இந்த மூன்றின மக்களுக்கும் நல்ல தலைமைத்துவம் இருக்குமென்று சொன்னால் இந்த நாட்டில் இந்தப் பிரச்சினை இல்லை. சிறிலங்காவிலுள்ள இராணுவம் முப்படைத் தளபதிகள், புலனாய்வுப்பிரிவு, பொலிஸ்பிரிவு அனைவருக்கும் நன்றி செலுத்தவேண்டிய கடப்பாட்டுக்குள் நான் இருக்கிறேன். இந்த தாக்குதல் நடைபெற்று 8 நாட்களுக்குள் இந்த நாட்டில் 90, 95 சதவீதமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்கள். உண்மையில் அதைப் பாராட்ட வேண்டும்.
நாங்கள் அவர்களுக்கு உந்து சக்தியாக இருக்க வேண்டும். இவர்களுக்கு பக்கபலமாக நாங்கள் இருக்க வேண்டும். அதை விட்டு குற்றம் கண்டு பிடிக்கிறதில்தான் அரசியல் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருக்கின்றார்களே ஓழிய வேறொன்றும் இல்லை. ஆனால் ஈரோஸ் நிச்சயமாக இந்த நாட்டில் மூவின மக்களும் நிம்மதியாக வாழ வேண்டும், நாட்டில் புரையோடிக் கொண்டிருக்கும் புற்று நோய், இந்த நாசகாரக் கும்பலை அழிக்கவேண்டும். இந்தநாடு நிம்மதியான வாழ்க்கையை நடத்தவேண்டும் என்று சொன்னால் ஈரோஸ் இந்த சூத்திரதாரிகள் அனைவரையும் கைது செய்வதற்கு அல்லது அழிப்பதற்கு அல்லது அடியோடு துடைப்பதற்கு வடக்கு, கிழக்கு, மலையகம் மாத்திரமில்ல, இலங்கையில் அனைத்து பகுதிகளிலுமுள்ள முப்படை, இராணுவம், புலனாய்வு பிரிவுக்கு உதவி செய்வதற்கு ஈரோஸ் எப்போதும் தயாராக இருக்கும். இதற்காக இராணுவத்துடன் சேர்ந்து செயற்படுவதற்கு அல்ல, புலனாய்வு பிரிவோடு சேர்ந்து செயற்படுவதற்கு அல்ல, இந்த நாட்டில் புரையோடிக் கொண்டிருக்கும் இந்த நிலைமைகளைத் துடைப்பதற்கு மக்கள் மீண்டுமொரு நல்ல வாழ்க்கையை வாழ்வதற்கு அப்போது தமிழ்மக்களுக்கு ஏற்பட்ட அந்த வலி தற்போது முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அப்பாவி முஸ்லிம் மக்கள் பாதிக்கப்படக் கூடாது அதேபோல் அப்பாவி தமிழ் மக்கள் பாதிக்கப்படக் கூடாது. அப்பாவி சிங்கள மக்கள் பாதிக்கப்படக் கூடாது. நாட்டையும் மக்களையும் அப்பாவி தமிழ் மக்கள் பாதிக்கப்படக் கூடாது. இந்த நாட்டையும் மக்களையும் பாதுக்;க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமல்ல மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு அமைப்பு வடிவம் ஒன்று இருக்கிறது. எமது கட்சியின் பொருளாளர் சிவானந்தராசா தலைமையில் நாங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
அதேபோல் மலையகம், வன்னி,யாழ்ப்பாணம் அனைத்து மாவட்டங்களிலும் செற்;பட்டுக் கொண்டிருக்கின்றோம். இங்கு அனேகமாக வாகரை கட்டுமுறிப்பு, ஆண்டான் குளம் போன்ற இடங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட விதவைகள் அங்கவீனர்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பை நாங்கள் பெற்றுக் கொடுத்திருக்கின்றோம். அதே போல் இந்த மாதத்திற்குள் கிட்டத்தட்ட மூன்று தடவைகள் இந்தியா அரசாங்கத்திடம் தொடர்பை ஏற்படுத்தி இங்கு உள்ள பின் தங்கிய கிராமத்திற்கான கல்வி ஊக்குவிப்புக்கான வசதிகளை கேட்டுள்ளோம். அதே போல் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு ஊனமுற்றோர்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பை பெற்று தருமாறு கேட்டுள்ளேன். அவர்களும் செய்து தருவோம் என்று சொல்லி உள்ளார்கள். அதற்கான செயற்பாடுகளை நாங்கள் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம். கூடுதலாக இன்று வடக்கு கிழக்கு மாகாணங்களில் சில அரசியல்வாதிகள் அல்லது அரசியல் பிரமுகர்கள் அல்லது அரசியல் தலைவர்கள் கூடுதலாக இருக்கின்ற காரணத்தினால் மலையகத்தில் தான் ஈரோசின் வேலைகள் கூடுதலாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
மலையகத்தில் உள்ள மக்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு சமந்தமாக எல்லா அரசியல்வாதிகளும் கங்கணம் கட்டிக்கொண்டு ஆடலாம் ஆனால் ஈரோஸ் இன்றைக்கு மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. இன்றைக்கு பொலநறுவை, கொழும்பு, அம்பாந்தோட்டை பகுதிகளில் சாதாரணமாக ஒரு கூலி தொழிலாளிக்கு ஆயிரம் ரூபா தொடக்கம் ஆயிரத்து இருநூறு ரூபா வரைக்கும் சம்பளம் கொடுக்கார்கள் என்றால் மலையகத்தில் உள்ள அந்த தோட்டத் தொழிலாளி காலை 7 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை 18 கிலோகிரம் கொழுந்து பறித்தால் தான் ஒரு நாள் சம்பளம் வேலைக்கு போகவில்லை என்றால் அன்றைய நாள் சம்பளம் இல்லை அந்த ஒரு நிலைமையை கூறி நாங்கள் வழக்கு தாக்கல் செய்துள்ளோம். அதில் நாங்கள் கூடிய கவனம் செலுத்தியுள்ளோம். ஏனென்றால் மட்டக்களப்பில் மாத்திரம் இன்றி நான் ஒட்டு மொத்த ஈரோசிற்கும் தலைவர் என்றபடியால் சகல மாவட்டங்களிலும் நாங்கள் எங்களுடைய வேலைகளை செய்து வருகின்றோம்.
அதே நேரத்தில் யாழ்ப்பாணத்தில் கிட்டத்தட்ட 700 கோடி ரூபா இந்தியா அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டு ஐரிவிலேஜ் நிறுவ இருந்த அந்த சந்தர்பத்தில் தமிழ் தேசிய கூடமைப்பின் கெடுபிடியால் நாங்கள் அதை செய்வோம் இந்தியா அரசாங்கத்துடன் பேசி உள்ளோம் எனக்கூறி அந்த வேலை தடைப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு பெரிய வேலை திட்டம் ஒன்றை நாம் முன்னெடுக்க உள்ளோம் இந்த மாத கடைசியில் அது ஆரம்பிக்கப்படும். உங்களுக்கு தெரியும் இந்தியாவில் அத்திப்பட்டி என்ற ஒரு கிராமம் எப்படி வரைபடத்தில் இருந்து இல்லாமல் போனதோ அதே போல் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடிக்கு அண்மித்த ஒரு கிராமம் நாவலடி அதில் பிள்ளையாரடி என்ற ஒரு கிராமம் சரித்திரத்திலே இல்லாமல் போய்விட்டது.
அதில் ஆலமரத்திற்கு கீழே ஒரு பிள்ளையார் கோவிலும் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றுமே உள்ளது. அங்கு மக்கள் இல்லை அந்த மக்களை நாங்கள் தேடிக் கண்டுபிடித்துள்ளோம். முருத்தானை, வடமுனை, கழிச்ச வடமுனை, பொண்டுகல்சேனை, மயிலவட்டுவான், போன்ற பகுதிகளில் கிட்டத்தட்ட 42 குடும்பங்ளை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். அந்த பகுதியில் வாழ்ந்த 288 குடும்பங்களையும் நாங்கள் மீண்டும் குடியமர்த்த தீர்மானித்துள்ளோம். அது சம்மந்தமாக இந்தியா அரசாங்கத்திடம் பேசி இருக்கின்றேன். அது சம்மந்தமாக அரச அதிபரிடமும் நான் பேசி இருக்கின்றேன் இந்த மக்களை மீளவும் குடியமர்த்த வேண்டும் அவர்களுக்கான வீட்டுத்திட்டம் வழங்கப்பட வேண்டும். குடிநீர் வசதியில் இருந்து மலசல வசதி வரை சகல வசதி வாய்ப்புக்களையும் செய்து கொண்டுக்க நாங்கள் இந்த மாத இறுதிக்குள் அந்த வேலை திட்டத்தை ஆரம்பிப்போம் என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment