களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு வைத்திய நிபுணர்களை நியமிப்பது தொடர்பான அவரச கூட்டம் ஒன்று இராசாசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் சாணக்கியனின் ஏற்பாட்டடில் களுவாஞ்சிகுடி சமூத்திரபுரத்தில் அமைந்துள்ள சாணக்கியனின் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்றது.
இம்முறை சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வைத்திய நிபுணர்களுக்கான இடமாற்றப்பட்டியலில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த வைத்திய நிபுணர்கள் அனைவரும் வேறு இடங்களுக்கு இடம்மாற்றம் செய்வதற்காக அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் அவ்விடத்திற்கு பதில் வைத்திய நிபுணர்கள் எவரும் பரிந்துரைக்கப்படவில்லை இதனை தொடர்ந்து வைத்தியசாலை சமூகம் இவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்து விரைந்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டே குறித்த அவசர கூட்டடானது எற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இக் கூட்டத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் மதனழகன், வைத்திய அத்தியட்சகர் ப.சதீஸ், சுகாதார வைத்திய அதிகாரி கி.ரமேஸ், தோல் வைத்திய நிபுணர் க.தமிழ்வண்ணன், போரதீவுப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி ப.குணராஜசேகரம், மற்றும் வைத்திய அதிகாரிகள் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை பிரதேச சபை உறுப்பினர்கள் வைத்தியசாலை நலன்புரி சங்கத்தினர், சங்கங்கள் கழகங்களை சார்ந்த பிரதிநிதிகள், என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது வைத்தியசாலையில் நிரந்தரமாக வைத்திய நிபுணர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஆலோசனைகள் கலந்து கொண்ட வைத்திய நிபணர்களினால் வழங்கப்பட்டன. கூட்டத்தில் கலந்து கொண்ட ஏனையோரிடமும் குறித்த விடயம் தெர்டர்பில் கருத்துக்கள் கேட்டறியப்பட்டது. தற்காலிகமாக வைத்தியசாலையில் நிபுணர்களை எவ்வாறு வரவழைக்கலாம் என்பது தொடர்பாகவும் ஆலோசனை நடாத்தப்பட்டதுடன். கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் ஏகோபித்த முடிவாக சுகாதர அமைச்சரினை நேடியாக சந்தித்து மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பததென தீர்மானிக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment