3 May 2019

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும்,தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

SHARE
(விஜெய்)

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும்,தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டது தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்தன் மீதான வழக்கு வியாழக்கிழமை (02)  மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு மேல்நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இஸ்ஸடீன் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது எதிர்வரும் ஜுலை மாதம் 31 ஆம் திகதிக்கு வழக்கினை ஒத்திவைத்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சித்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப்புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல், முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க (வினோத்) ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அரச சட்டமா திணைக்கள வழக்கரிஞர் சமூகம் அளிக்காமையினால் இன்றும் வழக்கு ஒத்தி வைக்கப்பபட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம், 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதியன்று மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் பிறப்பு நள்ளிரவு ஆராதனையில் கலந்து கொண்டிருந்த போது தேவாலயத்திற்குள்ளேயே வைத்து அடையாளந் தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வழக்கு விசாரணைக்கு சென்று திரும்பிய பிள்ளையான் ஊடகவியலாளர்களிடம் நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்கு காரணம் நாட்டில் உள்ள ஆட்சியாளர்களே காரணமாகும் என இதன்போது கருத்து தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: