மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கர்பலா பகுதியில், நேற்று (13) மாலை, இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
ர்பலா வீதியின் குறுக்கு வீதியிலுள்ள காணியொன்றின் ஓரத்திலே இவை மீட்கப்பட்டன என்றும் சம்பவ இடத்துக்கு வந்த விசேட அதிரடிப்படையினரால், அவை மீட்கப்பட்டன என்றும் தெரிவித்த பொலிஸார், இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 Comments:
Post a Comment