22 May 2019

கொக்கட்டிச்சோலை பிரான்சிஸ் புனித செபஸ்தியார் தேவாலய முன்றலில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வு

SHARE
கடந்த உயிர்த்த ஞாயிறுதினத்தன்று (21.04.2019) பயங்கரவாதிகளின் குண்டுத் தாக்குதலில் உயிர் நீத்த பொதுமக்களின் ஆத்ம சாந்தி வேண்டி மட்டக்களப்பு மாவட்டம் படுவான் பல்சமய அமைப்பும், பொதுமக்களும் இணைந்து எற்பாடு செய்திருந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை(21) பிற்பகல் கொக்கட்டிச்சோலை பிரான்சிஸ் புனித செபஸ்தியார் தேவாலய முன்றலில் நடைபெற்றது.
மட்டக்களப்பு இயேசு சபைத் துறவி  ஜேசெப் மேரி சுவாமிகளின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆரயத்தின பிரதம குரு மு.கு.சச்சிதானந்தக் குருக்கள், கல்முனை ஸ்ரீ சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துக்கல தேரர், அருட் தந்தை ரி.லோரன், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் காத்தான்குடி கிளைத் தலைவர் ஏ.எம். காறூன் றசாதி, மற்றும், கிறிஸ்தவ, இஸ்லாமிய ஏனைய மதருகுமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா, மண்முனை தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் சி.புஸ்பலிங்கம், தேசிய சமாதானப் பேரவையின் உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவை உறுப்பினர்கள், படுவான்கரை பிரதேச மக்கள்

பொதுமக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், உள்ளிட்ட கலந்துகொண்டு நினைவஞ்சலி செலுத்தினர்.

இதன்போது கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆரயத்தின பிரதம குரு மு.கு.சச்சிதானந்தக் குருக்கள், கல்முனை ஸ்ரீ சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துக்கல தேரர், ஆகியோர் நினைவுப் பேருரைகளையும் நிகழ்த்தினர்.


























SHARE

Author: verified_user

0 Comments: