மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வீதியருகில், காணப்பட்ட சிறு பற்றைகள், மற்றும், குப்பைகூழங்கள் அனைத்தும் ஜே.சி.பி. இயந்திரத்தின் மூலம் செவ்வாய்கிழமை (14) துப்பரவு செய்யப்பட்டன.
களுவாஞ்சிகுடி வைத்தியசாலையின் நலம்புரிச் சங்கத்தின் வேண்டுகோளிற்கிணங்க மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் இந்நடிவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது வைத்தியசாலை வீதியருகில் காணப்பட்ட பற்றைகள், மற்றும் குப்பை கூழங்கள் அனைத்தும், துப்பரவு செய்யப்பட் வைக்கப்பட்டன.
இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைத் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர் மே.வினோராஜ், வைத்தியசாலை நலம்புரிச் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment