மட்டக்களப்பில் சீயோன் தேவாலயத்திற்கு அருகிலுள்ள தேசிய பாடசாலைகளுக்கு கடும் பாதுகாப்பு மாணவர்களின் வரவு அதிகரிப்பு – 2 ஆம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காக கனிஸ்ட பிரிவு பாடசாலைகள் திங்கட்கிழமை (13) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கல்வி அமைச்சினால் மட்டக்களப்பில் 2 ஆம் தவணை கற்றல் நடவடிக்கை களுக்காக பலத்து பாதுகாப்புக்கு மத்தியில் கனிஸ்ட பாடசாலைகள் திங்கட்கிழமை (13) ஆரம்பத்திலுள்ள நிலையில் மாணவர்களின் வரவு அதிகரித்து காணப்பட்டுள்ளது. கடந்த வாரத்தை பார்க்கிலும் திங்கட்கிழமை கனிஸ்ட பிரிவு மாணவர்கள் உட்பட மாணவர்களின் வரவு வீதம் நகர் புறபாடசாலைகளில் அதிகரித்துள்ளதை அவதானிக்ககூடியதாகவுள்ளது. கனிஸ்ட பிரிவு மாணவர்களின் பாதுகாப்பு கருதி சற்று முன்கூட்டியே பாடசாலைகள் வகுப்பு அடிப்படையில் பாடசாலைகள் விடப்படவுள்ளது. இதே வேளை மட்டக்களப்பின் மற்றைய கல்வி வலயங்களிலும் மாணவர்களின் வரவு வீதம் அதிகரித்து காணப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வி அமைச்சினால் சகல பாடசாலை வளாகம் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தபட்ட பின்பு மட்டக்களப்பு 5 கல்வி வலயத்திற்குட்பட்ட 399 பாடசாலைகள் பாடசாலை சமுகத்தின் ஒத்துழைப்புடன் இராணுவத்தின் பலத்து பாதுகாப்புக்கு மத்தியில் கனிஸ்ட பிரிவு பாடசாலைகள் ஆரம்பக்கப்பட்டன. மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்து முகமாக சகல பாடசாலைகளிலும் பரிசோதனை நடவடிக்கைகளின் பின்பு மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரஊழியர்களுக்கு முன்னெடுக்கப்பட்டதன் பின்பு பாடசாலை வாளகத்தினுள் அனுமதிக்கப்பட்டனர்.
சிறந்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதால் கற்றல் நடவடிக்கைகள் சகல பாடசாலைகளிலும் ஆரம்பிக்கப்பட்டுவுள்ளதாகவும் இதற்கு உதவிய அரசாங்கம் மற்றும் கல்வியமைச்சுக்கும் இராணுவத்திற்கும் தமது நன்றியை பொது மக்கள் தெரிவித்தார் மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல பாடசாலையின் நுழைவாயிலில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் தொடர்ச்சியாக பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப் பட்டுள்ளதுடன் பாடசாலையை அண்டிய பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment