29 May 2019

விவசாயம் அமைப்புக்கள் மற்றும் மாதர் கிராம அபிவிருத்தில் சங்கங்களுக்கு இலத்தரனியல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை (29) மட்டக்களப்பில் நடை பெற்றது.

SHARE
விவசாயம் அமைப்புக்கள் மற்றும் மாதர் கிராம அபிவிருத்தில் சங்கங்களுக்கு இலத்தரனியல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை (29) மட்டக்களப்பில் நடை பெற்றது.      
பெரன்டினா நிறுவனம் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில்   மாவட்ட  செயலகங்களுடன்  இணைந்து மாவட்ட ரீதியாக  கிராம மட்டங்களில்  பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது

இதற்கு அமைய  மூன்று வருட திட்டமாக மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில்  இயங்குகின்ற  விவசாய அமைப்புக்கள்  மற்றும் மாதர் கிராம அபிவிருத்தில் சங்கங்களின்  தகவல் தொடர்பாடல் பரிமாற்ற நடவடிக்கைகளை  மேம்படுத்தும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு அதற்கான இலத்தரனியல் உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன

இதன் கீழ் முதல் கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தின்  8 பிரதேச பிரிவிகளில் தெரிவு செய்யப்பட  30  கிராம சேவையாளர் பிரிவுகளில்  இயங்குகின்ற  30 விவசாய அமைப்புக்களும்   மற்றும் 30 மாதர் கிராம அபிவிருத்தில் சங்கங்களுக்கும்  மடிகணணிகள் , கையடக்க தொலைபேசிகள் மற்றும்  பிரிண்டர் இயந்திரங்கள்  வழங்கி வைக்கப்பட்டன   

மாவட்ட பெரன்டினா நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் என் .நிசாந்தன்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் கலந்துகொண்டு  மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட  ஏறாவூர் பற்று செங்கலடி , கோரளைப்பற்று தெற்கு கிரான் ,கோரளைப்பற்று வாழைச்சேனை , கோரளைப்பற்று வடக்கு வாகரை ,கோரளைப்பற்று ஓட்டமாவடி ஆகிய பிரதேச பிரிவுகளில் இயங்குகின்ற 30 விவசாய அமைப்புக்களும்   மற்றும் 30 மாதர் கிராம அபிவிருத்தில் சங்கங்களுக்கும்  இந்த இலத்தரனியல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன

இந்நிகழ்வில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்  திருமதி எஸ் . புண்ணியமூர்த்தி  மாவட்ட பெரன்டினா நிறுவன  உத்தியோகத்தர்கள் மற்றும்  அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ,கிராம மாதர் அபிவிருத்தி சங்கங்களின் உறுப்பினர்கள் , விவசாய அமைப்புக்களின் உறுப்பினர்கள் ,என பலர் கலந்துகொண்டனர்.






SHARE

Author: verified_user

0 Comments: