31 May 2019

உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 21.04.2019 அன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குகதலில் உயிர் நீத்த உறவுகளின் 41 ஆம் நாள் நினைவஞ்சலி.

SHARE
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் வாழைச்சேனை மயிலங்கரச்சை வாழ் மக்களும் இணைந்து தற்கொலை குண்டு தாக்குதலால் உயிர்நீத்த உறவுகளுக்கு 41ம் நாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வாழைச்சேனை மயிலங்கரச்சை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் க.கமலநேசன் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா, வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களாக எஸ்.நல்லரெட்ணம், எஸ்.பகிரதன்;, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னனி தலைவர் எஸ்.தீபாகரன், மயிலங்கரச்சை விகாராதிபதி ஸ்ரீமகிந்த லங்கார, தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய பிரமுகர்கள் உட்பட பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

கடந்த ஏப்ரல் 21ம் திகதி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் மட்டக்களப்பு சேயோன் தேவாலயம் உட்பட கொழும்பிலுள்ள தேவாலயங்கள் மற்றும் உல்லாச விடுதிகளில் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தற்கொலை குண்டு தாக்குதலால் உயிர்நீத்த உறவுகளின் ஆத்மா சாந்தி வேண்டி விசேட பிரார்;த்தனைகள், ஆத்மாசாந்தி பூசைகள் என்பன இடம்பெற்றதுடன், மத தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களால் ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது மயிலங்கரச்சை கண்ணகி அம்மன் ஆலய மதகுரு சிவஸ்ரீ.கண்ணன் தம்பாப்பிள்ளையினால் உயிர்நீத்த உறவுகளின் ஆத்மா சாந்தி வேண்டி விசேட பூசைகள் இடம்பெற்றதுடன், உயிர்நீத்த உறவுகளின் பெயரால் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானமும் வழங்கி வைக்கப்பட்டது.
























SHARE

Author: verified_user

0 Comments: