31 May 2019

மட்டக்களப்பில் சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 15 வது ஆண்டு நினைவு தின நிகழ்வு இடம்பெற்றது.

SHARE
மட்டக்களப்பில் வைத்து கடந்த 2004 ஆண்டு சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் அவர்களின் 15 வது நினைவு தின நிகழ்வு வெள்ளிக்கிழமை (31.05.2019) காந்தி பூங்கா முன்பாக படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில்  இடம்பெற்ற நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு  மலரஞ்சலி செலுத்தப்பட்டது. தீபச் சுடர் ஏற்றப்பட்டதனைத் தொடர்ந்து அன்னாரது ஆத்மா சாந்திக்காக மௌன அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில்  கிழக்கு மாகாண முன்னாள் பிரதி தவிசாளரும், மாகாண சபை உறுப்பினருமான இந்திரகுமார் பிரசன்னா, மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் எஸ்.சத்தியசீலன், மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புக்கள் ஒன்றியத்தின் தலைவர், மாநகரசபை உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், அரசியல்தலைமைகள், பொதுமக்கள்  கலந்துகொண்டார்கள்.








SHARE

Author: verified_user

0 Comments: