சமூக விஞ்ஞானப் போட்டியில் களுதாவளை மகா வித்தியாலயம் தேசியபாடசாலை மாணவன் தேசியமட்டத்தில் சாதனை.
புதன்கிழமை (03) வெளியான கடந்த வருடம் (2018) நடைபெற்ற தேசியமட்ட சமூக விஞ்ஞானப் போட்டியில் மட்.பட்.களுதாவளை மகா வித்தியாலயம், (தேசிய பாடசாலை) மாணவன் பூ.தசிக்குமார் தங்கப்பதக்கம் பெற்று பாடசாலைக்கும் பட்டிருப்பு கல்வி வலயத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இம்மாணவன் கடந்த வருடம் நடைபெற்ற கல்விப் பொதுத்தர உயர்தரப் பரீட்சையில் 2 ஏ.பீ. சித்திகளைக் பெற்று பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவரை பயிற்றுவித்த வரலாற்று ஆசிரியர் த.கோகுலகுமாரன் அவர்களுக்கும், அதிபர், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கம் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.
0 Comments:
Post a Comment