இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் ((Alaina Teplitz)) இற்கும் சமூக வலுவூட்டல் ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று புதன்கிழமை (17) மட்டக்களப்பு ஈஸ்ட்லகூன் ஹோட்டலில் இடம்பெற்றது.
மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க தூதுவர் மாவட்டத்தின் அபிவிருத்தி செயற்பாடுகள், இனங்களுக்கிடையிலான நல்லுறவு, நல்லிணக்கம், மட்டக்களப்பு மக்கள் எதிர்கொள்ளும் சமகால சவால்கள் குறித்து அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களுடன் கலந்துரையாடியதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் எதிர் கொண்டுள்ள காணி தொடர்பான பிரச்சனைகள், முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் ஏனைய சவால்கள், தொடர்பில் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களினால் இதன்போது அமெரிக்க தூதுவருக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
குறித்த சந்திப்பின் போது அமெரிக்க தூதுவராலயத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அதிகாரி சியான் ருத், சமூக வலுவூட்டல் அமைச்சின் பிரத்தியோக செயலாளர் அம்ஜத் மௌலானா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment