17 Apr 2019

வலயமட்ட தமிழ்மொழித்தினப் போட்டியில் மண்முனை மேற்கு முதலிடம்.

SHARE
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய தமிழ்மொழித்தினப் போட்டியில் மண்முனை மேற்கு கோட்டம் முதலிடத்தினைப் பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய தமிழ்மொழித்தினப் போட்டி செவ்வாய்கிழமை (16) கன்னன்குடா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இதன்போது, போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும், வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

வலயமட்டத்திலான  தனி, குழு போட்டி நிகழ்ச்சிகள் அனைத்தும் இங்கு நடைபெற்றன.

போட்டிகளில் பங்கேற்று முதலிடத்தினைப் பெற்ற நிகழ்வுகள், இன்று நடைபெற்ற பரிசில்கள் வழங்கும் நிகழ்வின் போது ஆற்றுகை செய்யப்பட்டன.

மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் சி.சிறீதரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், ஓய்பெற்ற அதிபர்களான திலகவதி ஹரிதாஸ், சி.அகிலேஸ்வரன் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

தமிழ்மொழித்தின வலயமட்ட போட்டி முடிவுகளின் அடிப்படையில், மண்முனை மேற்கு கோட்டம் 149 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தையும், மண்முனை தென்மேற்கு கோட்டம் 140 புள்ளிகளைப்பெற்று இரண்டாம் இடத்தினையும், 98 புள்ளிகளைப்பெற்று ஏறாவூர்பற்றுக்கோட்டம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டதாக இதன் செயலாளர் க.குணசேகரம் தெரிவித்தார். இதன் போது வெற்றியீட்டிய கோட்டங்களுக்கு வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.












SHARE

Author: verified_user

0 Comments: