திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா சிறப்பு விமானம் மூலம் செவ்வாய்கிழமை ரேணிகுண்டா விமான நிலையம் சென்றார். அங்கிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக திருமலைக்கு சென்ற அவரை திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் அணில் குமார் சின்கால், இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜு ஆகியோர் வரவேற்றனர்.
புதன்கிழமை சுப்ரபாத சேவையில் குடும்பத்தாருடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.
0 Comments:
Post a Comment