30 Apr 2019

தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவச் செலவுக்காக நிதி உதவிகள் வழங்கி வைப்பு.

SHARE
(ஜனா)

தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவச் செலவுக்காக நிதி உதவிகள் வழங்கி வைப்பு.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் ஆலயத்தின் நிதி உதவியில் மட்டக்களப்பு சீயோன் தேவாலய தாக்குதலில் காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவுகளுக்காக உதவித் தொகைகள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்து திங்கட்கிழமை (29) வழங்கி வைக்கப்பட்டன.

கடந்த 21.04.2019 அன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் காயமடைந்து தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருபவர்களின் மருத்துவ செலவுகளின் நிமிர்த்தம் அவர்களுக்கான உதவித் தொகைகள் வழங்கி வைக்கப்பட்டன. 

மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் மற்றும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் ஆலய நிர்வாகிகளினால் உரியவர்களிடம் இவ்உதவித் தொகைகள் கையளிக்கப்பட்டன.




SHARE

Author: verified_user

0 Comments: