நாட்டிற்காக ஒன்றிணைவோம் ஜனாதிபதியின் செயற்றிட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை தென்மேற்கு கோட்ட மாணவர்களுக்கான தொழில்வழிகாட்டல், பாடத்தெரிவு தொடர்பிலான வழிகாட்டல் நிகழ்வும் கழிவுப்பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்ட பொருட்களின் கண்காட்சியும் திங்கட்கிழமை (08) முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றன.
மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் சி.சிறிதரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், ஓய்வுபெற்ற வலயக்கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன் மற்றும் கல்வி வலய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
கல்விப் பொதுத்தராதர சாதாரணதரத்தில் தோற்றி உயர்தரம் கற்க இருக்கின்ற மாணவர்கள், தமக்கான எதிர்காலத்தினை எவ்வகையில் திட்டமிடுவது, எத்துறைப்பாடங்களை தெரிவு செய்வதுபோன்ற வழிகாட்டல்களும், ஒவ்வொரு மாணவர்களையும் சுயமதிப்பீடு செய்து அவர்களுக்கான எதிர்கால தொழில்துறைசார்ந்த வழிகாட்டல்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
மேலும், கழிவுப்பொருட்களை பாவனைப் பொருட்;களாக மாற்றும் செயற்பாட்டின் கீழ், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மாணவர்களினால் கழிவுப்பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட பாவனைப்பொருட்கள் பலவும் காட்சிப்படுத்தப்பட்டன. அதேவேளை கழிவுப்பொருட்களை கொண்டு பாடசாலையின் முகப்பும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதனை ஆசிரிய ஆலோசகர் கு.கண்ணன் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இக்கண்காட்சியையும் மாணவர்கள், ஆசிரியர்கள் வருகைதந்து பார்வையிட்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment