25 Apr 2019

சாய்ந்தமருதிலிருந்து பெரியகல்லாற்றிற்கு டயர் வாங்க வந்தவர்கள் பெரியகல்லாறு வைத்தியசாலையை நோட்டமிட்டதால் சந்தேகத்தின் போரில் இருவர் கைது.

SHARE
சாய்ந்தமருதிலிருந்து பெரியகல்லாற்றிற்கு டயர் வாங்க வந்தவர்கள் பெரியகல்லாறு வைத்தியசாலையை நோட்டமிட்டதால் சந்தேகத்தின் போரில் இருவர் கைது.அம்பாறை மாவட்டம் சாந்தமருதுப் பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்டம் பொரியகல்லாற்றிற்கு ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் டயர் வாங்குவதற்காக வந்தவர்கள், பொரியகல்லாறு வைத்தியசாலையை நோட்டமிட்ட சம்பவம் ஒன்று புதன்கிழமை மாலை (24) இடம்பெற்றுள்ளது.
அவர்களின் நடத்தைதையை அவதானித்த அப்பகுதி இளைஞர்கள் அவர்களை விசாரித்தபோது டயர் வாங்குவதற்கு வந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

உங்களின் பெயர் என்ன எங்கிருந்து வருகின்றீர்கள், ஏன் இங்கு டயர் வாங்க வந்தீர்கள், உங்களுடை பகுதியிலர் டயர் இல்லையா, உங்களுடைய அடையாள அட்டையைக் காட்டுங்கள் என இளைஞர்கள் வினவியுள்ளனர். இதன்போது அவர்கள் தெரிவித்த பெயருக்கும், அவர்களது அடையாள அட்டையில் இருந்த பெயர்களுக்கும் வித்தியாசம் இருந்துள்ளது. 

உடனடியக குறித்த நகர்கள் மீது சந்தேகம் கொண்ட அப்பகுதி இளைஞர்கள் உடனடியாக களுவாஞ்சிகுடி பொலிசாருக்கு அறிவித்துள்ளனர். உடன் இஸ்த்தலத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உப்புல் குணவர்த்தன உள்ளிட்ட குழுவினர் குறித்த இருவரையும், சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதோடு, அவர்கள் செலுத்தி வந்த ஸ்க்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை வியாழக்கிழமை (25) நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.










SHARE

Author: verified_user

0 Comments: